தியத்தீரா சபையின் காலம் THE THYATIREAN CHURCH AGE பிரான்ஹாம் கூடாரம்,இந்தியானா, அமெரிக்கா 60-12-08 1.இன்றிரவில், இந்த மகத்தான சபைக்காலத்தில் பிரவேசிக்கும் முன்னர், நமது கர்த்தர் நம்மேல் தம்முடைய ஆவியை ஊற்றி நம்மை மீண்டும் ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இதிலுள்ள மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே நம்மால் பார்க்க இயலும், ஏனெனில், அந்த மகத்தான வேளை வந்து கொண்டிருக்கிறது, நாம் இவ்வாரம் முழுவதும் இங்கே இருக்கப்போகிறோம். ஓ, நேற்று இரவில் நமக்கு அப்படிப்பட்ட மகிமையான வேளை உண்டாயிருந்தது!  2. நல்லது, இப்பொழுது, நாம் வேதவாக்கியங்களை வாசிப்பதற்கு முன்னால், ஜெபத்திற்காக எழுந்து நிற்போமாக. அப் பொழுது கொஞ்ச நேரம் நமது நிலைகளை மாற்றிக்கொள்வோம்,  3. எங்கள் கிருபையுள்ள பரம பிதாவே, எல்லாவற்றிற்கும் போதுமான நாமமாகிய கர்த்தராகிய இயேசுயென்னும் நாமத்தில் நாங்கள் வருகிறோம். ஒரு நாளில் நீர் வருவீர் என்பதை நாங்கள் அறிந்தவர்களாயிருக்கிறோம். நீர் மரித்தவராக அல்ல, சதாகாலமும் ஜீவிக்கிறவராக, ஜீவிக்கிற தேவ குமாரன் நீரே என்ற அந்த மகத்தான வெளிப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, அவர்களுடைய இருதயங்களை ஆயத்தம் பண்ணுவதற்காக நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம். நீர் உம்முடைய சபையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்; பெந்தெகொஸ்தே நாளில் ஏற்பட்ட அனுபவத் திற்கு சாட்சியாக இது இருக்கிறது. மகத்தான வேளையாகிய கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வருவதைக் குறித்தும் அவ்வெளிப்பாடு உண்டாயிருக்கிறது. ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகள் கடந்தபிறகும், அந்த மகிழ்ச்சியான வேளைகளை இப்பொழுதும் அனுபவிக்க முடிந்ததற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 4. பிதாவே, உம்முடைய வலது கரத்திலே, ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தீர், அவர்களை சபைக் காலங்களுக்குரிய தூதர்கள்'' ஊழியக்காரர்கள் என அழைத்தீர்; ஒவ்வொரு காலத்திலும் இலங்கிய அம்மகத்தான மனிதர்களுக்கு மரியாதை செலுத்தும்படி எங்கள் தலைகளை வணங்குகிறோம். எபேசுவின் காலத்தில் வாழ்ந்த மகத்தான பரிசுத்தவானாகிய பவுலுக்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! உம்முடைய மகத்தான ஊழியக்காரனாகிய ஐரேனியஸுக்காக, ஓ ஆண்டவரே, நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! பரிசுத்த மார்ட்டினுக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இன்றிரவில் பரிசுத்த கொலம்பாவுக்காகவும் நன்றி செலுத்துகிறோம். அந்தகார ரோமானிய கொள்கைகள், சபையில் நுழைந்த அஞ்ஞானக் கொள்கைகள், இவற்றின் மத்தியில், இம்மனிதர்கள் பெந்தெ கொஸ்தே செய்திக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் மிகுந்த தீரத்துடன் நின்றனரே, இவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, அற்புத அடையாளங்கள் செய்தல், பிணியாளிகளை குணமாக்குதல், மரித் தோரை எழுப்புதல் இவற்றை பெற்றிருந்தார்கள்.  5. கர்த்தாவே, அவர்களில் அநேகர் வீணாக குற்றஞ்சாட்டப் பட்டு, கொல்லப்பட்டு, சிங்கங்களுக்கு உணவாக்கப்பட்டனர். இன்னும் பெரிய காரியங்களெல்லாம் நடைபெற்றன. நீதிமான் களின் இரத்தத்தால் பூமியானது நிறைந்திருக்கிறது. பிதாவே, அவர்களது இரத்தம் அந்த துன்மார்க்க, விபச்சார சபைக்கு எதிராக இன்று கதறுகிறது. ''தூதனானவன் தேவனுடைய கோப கலசத்தை ஊற்றினான், ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அவனில் காணப்பட்டது'' என்று நீர் கூறியுள்ளீர்.  6. கர்த்தாவே, காலமானது முடிவுக்கு வந்துகொண்டிருக்கிற படியால், இப்பொழுது நிலைநிற்க எங்களுக்கு உதவி செய்தருளும். இரண்டு கொம்புகளையுடைய மிருகம் பூமியிலிருந்து எழும்புவதை நாங்கள் காண்கையில், இப்பொழுது எங்களுடைய காலமானது முடிவுக்கு வரப்போகிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அம்மிருகம் திரளான ஜனங்களின் நடுவிலிருந்து எழும்பப் போவ தில்லை. அது “ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.'' பிதாவே, இந்த சபைகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு சமஷ்டியாக ஆகின்ற இவ்வேளையில், அவர்களெல்லாம் சேர்ந்து, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவார்களே, அப்பொழுது, அவர்களோடு கைகோர்த்துக்கொள்ளாத அந்த சிறு மந்தையின் மேல் அது பயங்கரமாயிருக்குமே, கர்த்தாவே உம்முடைய ஜனம் அப்பொழுது பகிஷ்கரிக்கப்படுவார்கள், ஆனால் அவ்வேளையில் உம்முடைய சபையை எடுத்துக்கொள்வதாகவும், எங்களுக்கு உதவி செய்வதாகவும் நீர் வாக்குரைத்திருக்கிறீர், கர்த்தாவே.  7. ஒரு துளி மழை கூட விழாதபோது, நோவா பேழைக்குள் இருந்தான். சோதோமில் அக்கினி விழுவதற்கு முன்னால், லோத்து வெளியேறிவிட்டான். பிதாவே, அணு ஆயுத சக்திகள் வெடித்து இப்பூமியை தூள்தூளாக சிதறிப்போகும்படி செய்வதற்கு முன்னால், சபையானது இப்பூமியைவிட்டு போய்விட்டிருக்கும். அதற்காக நாங்கள் சந்தோஷமாயிருக்கிறோம், கர்த்தாவே. இன்றிரவில், குண்டுகள் ஆயுதக்கிடங்குகளில் ஆயத்தமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்திருக் கிறோம்.  8. நாங்கள் பரலோகத்தை நோக்கிப் பார்த்து, மனுஷ குமாரன் தன்னுடைய சபையை எடுத்துக்கொள்வதற்காக, தனது சிங்கா சனத்தை விட்டு எழும்பி பூமியை நோக்கிப் புறப்படுவதை காண முடிகிறது. அவ்வேளையில், இந்த பாவமான பூமியை அவரது விலையேறப்பெற்ற பாதங்கள் தொடாது என்று நாங்கள் அறிந்திருக் கிறோம். அது ரெபெக்காள் ஒட்டகத்தின் மேல் வருகையில், தன் மணாளனை தூரத்தில் பார்த்தபோது, ஒட்டகத்தை விட்டு கீழிறங்கி, ஆபிரகாமுடைய வீட்டிற்கும் வயல்வெளிகளுக்கும் நடுவே, தன் மணாளனை சந்திக்கப் புறப்பட்டாளே, அதைப்போல் இது இருக் கிறது. ஓ தேவனே, சபையானது தன்னுடைய மணாளனையும் ஆகா யத்தில் சந்திப்பாள், ''உயிரோடிருக்கிற நாம், நித்தியரையடைந் தவர்களுக்கு முந்திக் கொள்ளுவதில்லை; தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட (வெளியிலே) ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்''.  9. ஓ, இன்றிரவில் எங்களுக்கு உதவி செய்யும், கர்த்தாவே. ஆவியின் இனிமையை எங்களுக்குத் தாரும். எம்மிடமிருந்து எல்லா கசப்பையும், அலட்சியத்தையும் அகற்றியருளும். நாங்கள் பரிசுத்த ஆவியோடு முழுவதும் ஒன்றிப் போய்விடட்டும். தேவனுடைய தூதனானவர் இன்றிரவில் ஆளுகை செய்யட்டும். 10. கர்த்தாவே, இந்த மக்களுக்கு என்ன கூற வேண்டும் என்பதை நான் அறியேன். நீர் என்ன செய்தீர் என்பதைப்பற்றிக் கூறும் வரலாற்றுக் குறிப்புக்களை என்னிடம் நான் கொண்டவனாய் இருக்கிறேன், ஆனால் எதிர்காலத்தைப் பற்றி நீர்தான் வெளிப் படுத்த வேண்டும். எனவே, அதை நீர் எங்களுக்குத் தாரும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் வேண்டுகிறேன். ஆமென்.  11. இப்பொழுது நாம் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத் திற்கு திரும்புவோம். இன்றிரவில் நாம் நான்காவது சபைக் காலமாகிய தியத்தீரா சபைக்காலத்தைப்பற்றி படிக்கப் போகி றோம். இக்காலம் ஒரு பெரிய சபைக்காலம், இருண்ட காலம் என்று அறியப்பட்டுள்ளது இக்காலம்தான். இச்சபைக் காலம் கி.பி.606ல் துவங்கி, கி.பி.1520ல் முடிவுற்றது. என்னால் இயன்ற அளவு நான் கண்டு கொண்டது இதுதான். அநேக அறிஞர்கள் இச்சபைக் காலத்திற்கு பரிசுத்த பேட்ரிக்கை அதன் நட்சத்திரமாக தெரிந்துகொள்கின்றனர்.  12. ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைக்காலங்களுக்குரிய “ஏழு தூதர்களாக' இருக்கின்றனர். நாளை இரவு சந்தேகத்துக்கிடமின்றி லூத்தரை ஐந்தாம் சபையின் தூதராகக் காண்போம் என்று நாம் அறிந்திருக்கிறோம். அதற்கடுத்த இரவில், வெஸ்லியைப்பற்றி பார்ப்போம். லவோதிக்கேயா சபைக்குரிய நட்சத்திரம் யாராக இருக்கும் என்பதை நாம் அறியோம். 1906ம் ஆண்டில் பெந்தெ கொஸ்தே காலம் துவங்கியதிலிருந்து நாம் அச்சபைக்காலத்தில் இருந்து வருகிறோம். ஆனால் ஒரு தூதன் எழும்பி, இவ்வெல்லா வெற்றுக்கோட்பாடுகளையெல்லாம் தகர்த்தெறிவான்; அத்தூதன் சபை தன் வீட்டிற்குப் போவதற்காக, சபையை ஆயத்தம் பண்ணுவான். ஆவிக்குள் போதகனான ஒருவன் அற்புத அடையாளங்களோடு எழும்புவான். நாம் அவனைக் கண்டுகொள்ள தேவன் நமக்கு உதவி செய்யுமாறு இப்பொழுது நான் ஜெபிக்கிறேன்.  13. வரலாற்றினூடே உற்றுநோக்கி, தூதனை தெரிந்தெடுக்கை யில், பரிசுத்த பேட்ரிக் என்பவர் ஒரு மகத்தான மனிதராக நாம் காண்கிறோம். பண்டைக்காலத்து, தொன்மையான கையெழுத்துப் பிரதிகளை நாம் எடுத்து சரிபார்க்கையில், அங்கே பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கர் அல்லவே அல்ல என்ற உண்மையைக் காண் கிறோம். அவர் கத்தோலிக்க சபையை எதிர்த்திருக்கிறார். சீர்திருத்த காலத்தில், பரிசுத்த பேட்ரிக் ஒரு கத்தோலிக்கர் அல்ல என்ற மறைக்கப்பட்ட அவ்வுண்மையானது தோண்டி வெளியே எடுக்கப் பட்டு, அவர் கத்தோலிக்கத்தை எதிர்த்தார் என்பது நிரூபிக்கப் பட்டது. அதுவரையிலும் கத்தோலிக்கர்கள், பரிசுத்த பேட்ரிக் கத்தோலிக்க சபையின் பரிசுத்தவான்களில் ஒருவர் என்ற பொய்யாக ஒரு கோட்பாட்டை பரப்பி வந்திருந்தனர். பரிசுத்த பேட்ரிக் ஒரு ஸ்தாபன மனிதனைப் போல் இருந்தார். அவர் ஒரு வேதகலாசாலையை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் தன் இரு சகோதரிகளுடன் நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருக்கையில், சிலரால் அவர்கள் மூவரும் கடத்தப்பட்டனர். இவருடைய சகோதரிகளை பிரித்துக்கொண்டுபோய் விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று பேட்ரிக் கேள்விப்படவே யில்லை. அவர்கள் ஒருவேளை ரோமாபுரிக்கு கொண்டு செல்லப் பட்டு அங்கு அடிமைகளாக விற்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பேட்ரிக்கும் கொண்டு செல்லப்பட்டு, ஒரு அடிமையாக விற்கப்பட்டார். விலைக்கு வாங்கினவன் அவருக்கு பன்றிகளை மேய்க்கிற வேலையைக் கொடுத்தான்.  14. அவர், தான் மேய்க்கும் பன்றிகளை பார்த்துக்கொள்ள நாய்களை பழக்குவித்தார். பல்வேறுவிதமாக பன்றிகளைப் போல் உறுமி பலவிதமான சமிக்ஞைகளை அவைகளுக்கு அவர் கற்பித் திருந்தார். அச்சமிக்ஞைகளைப் பார்த்து அந்நாய்கள் அவர் விரும்பு கிறபடியெல்லாம் நடந்துகொள்ளும். அந்த அளவுக்கு அவைகளைப் பழக்கி இருந்தார். ஒருநாள் ஒரு படகில் அவர் படுத்துக்கொண்டு, தன் மேல் நாய்கள் மூடிக்கொண்டு நிற்கும்படி அவைகளுக்கு சமிக்ஞை செய்ய, அவைகளும் அப்படியே செய்து, பேட்ரிக் தன் முதலாளிக்குத் தெரியாமல் தப்பி, கடலில் பயணம் செய்து தன்னுடைய சொந்த தேசமாகிய அழகான அயர்லாந்துக்கு போய் சேர்ந்து, உயிரோடிருந்த பெற்றோர்களை சந்தித்தார். பரிசுத்த மார்ட்டினின் சகோதரியின் மகன் தான் பரிசுத்த பேட்ரிக் ஆவார்.  15. இயேசு கிறிஸ்துவின் காலம் முதற்கொண்டு வாழ்ந்த மகத்தான தேவ மனிதர்களுள் நமக்குக் கிடைத்த ஒரு மகத்தான மனிதன் பரிசுத்த மார்ட்டின் ஆவார். பரிசுத்த மார்ட்டினுடைய சபைகள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அவர்கள் யாவரும் அந்நிய பாஷைகளில் பேசி, அடையாள அற்புதங்களையும் செய்த வர்களாக இருந்தார்கள். கத்தோலிக்கக் கொள்கைகளோடு விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞானமும் நிக்கொலாய் மதஸ்தினரும் விவாகம் செய்து கொண்டு ஸ்தாபனங்களை உருவாக்கிக் கொண்ட அந்த இருண்ட சபைக்காலத்திற்குள்ளாக, மார்ட்டின் பெந்தெகொஸ்தே விசுவாசத்தை காத்துக் கொண்டு வந்தார். நிக்கொலாய் என்றால், “சபையை அல்லது ஜனங்களை வென்று அவர்களை அதிகாரத்தை இழக்கச் செய்தல்'' என்று பொருள். இதன் மூலம் அவர்கள் சபையின் நடுவிலிருந்து பரிசுத்த ஆவியை அகற்றி விட்டு, ''மதகுரு என்ற மனிதன் பரிசுத்தமானவர்'' என்று கூறிக் கொண்டு, மதகுருக்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர். பாருங்கள்? கத்தோலிக்க சாமியாரிடம் போய் பாவங்களை அறிக்கையிட்டு விட்டால் போதுமானது, அவர்கள் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்ற அளவுக்கு நீக்குப் போக்காக ஆக்கப்பட்டது.  16. கடந்த இரவில், கான்ஸ்டன்டைன் சபையின்மேல் முத லாவது அத்தியட்சகரை ஏற்படுத்தினான், சபைக்கு பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் கொடுத்தான் என்று பார்த்தோம். இவைகள் நடந்த காலங்களைப் பற்றி தேதிகளையும் மற்ற காரியங் களையும் நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்துக் கொண்டுள்ளீர்கள். ஆண்டின் மிகக்குறைந்த பகலையுடைய டிசம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்ட சூரியனுக்கான பண்டிகையும் அவர்கள் சபையில் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இந்த வேதப்புரட்டை செய்து, அவரும் நீதியின் சூரியன் என்று இருக்கிற படியால், சூரியனின் பிறந்த நாளை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக ஆக்கி, அதை சபையில் கொண்டு வந்தார்கள். இயேசுவின் பிறப்பு ஏப்ரல் மாதமாக இருக்கையில், அதை டிசம்பர் மாதம் 25ம் தேதி சூரியக்கடவுளின் பிறந்த நாளுக்கு மாற்றினார்கள்.  17. டிசம்பர் 25ம் தேதி வரையிலும் ஐந்து நாட்களுக்கு ரோமர் களுக்கு பெரிய கொண்டாட்டங்கள், மற்றும் விளையாட்டரங் கத்தில் கேளிக்கை விளையாட்டுகளும் உண்டாயிருந்தன. அது அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்காரர்களின் மகாவிருந்தாக இருந் தது. அவர்கள் இம்மனிதனை கடவுள் என்ற அந்தஸ்திலேயே உயர்த்தி வைத்தார்கள். அவனுக்கு அதற்கேற்றவாறு உடையுடுத்தினார்கள். அவர்கள் தங்கள் கடவுளை தங்களோடு இருக்கப் பெற்றிருந்தனர். சபையானது ஆயிர வருட அரசாட்சியில் இருப்ப தால், அப்பொழுதே, கிறிஸ்து வருவதற்கு முன்பே, அது ஆயிர வருட அரசாட்சிக் காலம் என விசுவாசிக்கிற கொள்கைக்காரர்கள் அப்பொழுது ஏற்பட்டார்கள். பாருங்கள், ஏனெனில், அவர்கள் ஐசுவரியமுள்ளவர்களாகவும், ஒன்றும் குறைவில்லாததாகவும், அரசாங்கமும் சபையும் ஒன்றாக இணைந்ததாகவும் இருந்தனர். 'ஆயிர வருட அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்ற கத்தோலிக்க உபதேசம் இந்நாள் வரைக்கிலும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது ஆயிரவருட அரசாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது தவறான உபதேச மாகும் என்பதை நாம் அறிவோம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பிறகு தான் ஆயிர வருஷ அரசாட்சி ஏற்படுகிறது. அதுதான் சரி. பூமியானது இனிமையான விடுதலையின் நாளுக்காக ஏங்கித் தவிக்கிறது; கர்த்தர் பூமிக்கு திரும்பி வருகையில் அவ்விடுதலை கிட்டும்.  18. இக்காலத்தில் வாழ்ந்த மகத்தான பரிசுத்தவான் கொலம்பா என்பவர், மகத்தான தேவ மனிதனாக இருந்தார்.  19. அவருடைய வரலாற்றை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். நான்காவது சபைக்காலம் தியத்தீரா சபைக் காலம் ஆகும். தியத்தீரா என்றால், “தளர்ச்சியான, உறுதியில்லாத'' அல்லது ''நிச்சயமற்ற'' என்று பொருளாகும். பாருங்கள், இச்சபையின் காலம் முறைகேடானதாக, கி.பி.606 முதல் கி.பி.1500 முடிய நீடித்திருந்தது.  20. கொலம்பா என்பவர் தியத்தீரா சபைக்காலத்தின் நட்சத்திரமாக இருக்கிறார். இவர் அயர்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர். இவர் பரிசுத்த மார்ட்டினின் மருமானான பரிசுத்த பேட்ரிக்கிற்கு சுமார் 60 ஆண்டுகள் கழித்து தோன்றி, வாழ்ந்து வந்தார். எனவே பரிசுத்த பேட்ரிக்கிற்கு 60 ஆண்டுகளுக்கு பிறகு கொலம்பாவின் ஊழியம் துவங்கியது.  21. அவர் ஒருபோதும் ரோமானிய உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவர் மகத்தான விசுவாச மனிதனாயிருந்தார். ரோமன் கத்தோலிக்க உபதேசத்தை அவர் நிராகரித்தார். அவர் ஒருபொழுதும் ரோமாபுரிக்குப் போகவேயில்லை. அவர் அதை முழுவதுமாக புறக்கணித்தார். கொலம்பா இறந்த பிறகு அவர்கள் அவரை பரிசுத்தவான் ஆக்கினார்களா என்பதைக் காண முடியவில்லை. எவ்வாறு பரிசுத்த மார்ட்டின், ஐரேனியஸ், மற்றும் ஏனையோரையும் அவர்கள் பரிசுத்தவான்கள் ஆக்கவில்லையோ, அதைப்போலவே கொலம்பாவையும் பரிசுத்தவான் ஆக்கவில்லை. ஏனெனில் பெந்தெகொஸ்தேயின் அடையாள அற்புதங்களை பெற்று விசுவாசிக்கும் அந்த சபையில் அவர்கள் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர் ஒருபோதும் ரோமச் சபையின் உபதேசங் களை எடுத்துக் கொள்ளவேயில்லை. பரிசுத்த மார்ட்டினின் சகோதரியாகிய தேவபக்தியுள்ள தன் தாயார் விசுவாசித்திருந்தது போல, அவ்வுபதேசங்களின்படியே வேதத்தை அவர் விசு வாசித்தார். எந்தவொரு சமயத்திலும் ரோமானிய சபையின் உபதேசங்களை அவர் பின்பற்றவேயில்லை. ஒவ்வொரு விசுவாசியையும் மாற்கு 16ம் அதிகாரத்தில் வாக்குரைக்கப்பட்டுள்ள அடையாளங்கள் பின்தொடர வேண்டும் என்று அவர் போதித் தார். ஆமென்! நான்... அவ்விதமான ஒரு நபரைத்தான் நானும் விரும்புகிறேன், விசுவாசிக்கிறவர்களை. ஆம், ஐயா.  22. தேவன் அவரை, காதில் நன்கு விழும்படியான சப்தத்தினால் அழைத்தார். அது அவருக்கு இன்னொரு நல்ல அடையாளம், பாருங்கள். தேவனுடைய சப்தத்தை அவர் தெளிவாகக் கேட்ட பிறகு, ஒன்றும் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை, அவர் சென்று கொண்டேயிருந்தார். அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தேவனுடைய சத்தத்தைக் கேட்டார்.  23. கொலம்பாவின் ஊழியத்தில் நடந்த அநேக அற்புதங்களை நான் இங்கே எழுதி வைத்துள்ளேன். ஆனால் நாம் இந்த ஒன்றை எடுத்துக்கொள்வோம். கர்த்தர் அவரை அனுப்பிய ஒரு நகரத்திற்கு அவர் சென்றபோது, அந்நகரத்தார் அவரை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. நகரத்தின் வாயிலை அவர்கள் அடைத்து விட்டு, இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களைக் கொண்டு வந்து, கொலம்பாவின் பிரசங்கம் கேட்கக்கூடாதபடி, அவரது சப்தத்தை அடக்கிப்போடும்படி, இசையை மிக உரத்த சப்தத்தோடு இசைக்க வைத்தனர். கொலம்பா அப்பொழுது பிரசங்கிக்க ஆரம்பித்தார். தேவவல்லமையால், அவரது பிரசங்கம் இசைக் கலைஞர்களின் வாத்திய இசைப்பின் உரத்த சப்தத்தை அடக்கிப் போட்டு பிரசங்கத்தை யாவரும் கேட்கும்படி செய்தது மல்லாமல், அடைக்கப்பட்ட நகரத்தின் வாயிற்கதவுகள் தானாகவே திற வுண்டது. கொலம்பாவும் நகரத்தின் உள்ளே சென்று பிரசங்கித்தார். அங்குள்ளவர்கள் யாவருமே இரட்சிக்கப்பட்டனர்.  24. நான் இங்கே இன்னொரு அடையாளத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். கொலம்பா ஒரு நகரத்திற்குள் சென்றார். அந் நாட்களில் நகரங்களை மதில்கள் சூழக்கட்டியிருந்தார்கள். அவர் அந்நகரத்திற்குச் சென்ற போது, அந்நகரத்து மக்கள் அவரை ஏற் றுக் கொள்ளாமல், அவரைத் துரத்தி விட்டனர். எனவே அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அப்பொழுது அந்நகரத் தலைவனின் மகன் மிகவும் கடுமையான அளவில் சுகவீனமுற்றான். அவர்கள் உடனே இந்த நல்ல பரிசுத்தவானை திரும்ப அழைத்து வரும்படி ஆள் விட்டனுப்பினார்கள். கொலம்பா திரும்பி வந்து, அப்பையன் உடலின் மேல் படுத்து ஜெபித்த பொழுது, மரித்துக் கொண்டிருந்த அச்சிறுவன் குணமடைந்து உயிரடைந்தான்.  25. அவருடைய சபை பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தது. தன்னுடைய சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும், கண்டிப்பாக பரிசுத்த ஆவியை பெற்றிருத்தல் வேண்டும் என்றும், அதற்குக் குறைவான எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை என்பதில் அவர் மிக உறுதியாய் இருந்தார். ரோமானிய சபையின் குருக்களாட் சியை அவர் ஆட்சேபித்து, அதை மிகவும் கடுமையாக வெறுத்தார். கொலம்பா தான் இந்த நான்காவது சபையின் நட்சத்திரம் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அந்நிய பாஷைகளில் பேசி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து, மற்றும் இன்னபிற காரியங்களையும் செய்து, ஆதிசபை மக்கள் செய்ததான இக்கிரியைகளை விடாமல் நிறைவேற்றிக் கொண்டே போனார். தேவன் முடிவில்லாதவராக இருப்பாரானால், துவக்கத்தில் தன் சபையை எவ்விதம் நிர்மாணித்தாரோ, அதேவிதமாகத்தான் அது காலங்கள் தோறும், அது சிறுபான்மையாக ஆகினாலும், தொடர்ந்து நீடித்து வரவேண்டும். ஏறத்தாழ அது முற்றிலும் நசுக்கப்பட்டு அற்றுப் போகிற நிலையில், அது மீண்டும் லூத்தர் மூலமாக தோன்றுகிறது.  26. இப்பொழுது நாம் ஆரம்பிக்கப் போகிறோம். 18ம் வசனத் திலிருந்து ஆரம்பிப்போம். “தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்...'' வெளி.2:18  27. எழுதப்பட்ட இவைகளைப் பார்த்தீர்களா? அந்த சபைக் காலத்துக்குரிய ஒளியை ஏந்திக் கொண்டிருந்த அச்சபையின் தூதன் அல்லது ஊழியக்காரனுக்குத் தான் இவைகள் எழுதப்பட்டுள்ளன. பாருங்கள்? கடந்த இரவினில் நாம் பார்த்த பெர்கமு சபைக்காலத்தின் தூதனுக்கு, ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஒரு கல் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த கல்லில்....  28. நாம் அந்த 'கல்' என்ன என்பதையும், அது எதற்கு அடை யாளமாக இருக்கிறது என்பதையும் பார்த்தோம். அதன் அர்த்தம் ''பாறை'' என்பதாகும். அத்தூதன் ''கல்'' என்று அழைக்கப்பட்ட பேதுருவைப் போல் இருப்பான்.  29. உங்களுடைய பெயர் உங்களுடைய ஜீவியத்துடன் சம்மந்தப்பட்டதாக இருக்கும் என்பதைக் காணலாம். நான் அதைப் பற்றி அளவுக்கதிகமாக பேசக் கூடாது. ஏனெனில் பிசாசானவன் பொய்யான நியூமராலஜி கொண்டவனாக இருக்கிறான். (பிறந்த தேதி, பெயரில் உள்ள எழுத்துக்களுக்குரிய எண்கள் இவைகளைக் கூட்டிப் பார்த்து குறிப்பிட்ட நபருக்கு பலன் சொல்லுவது அல்லது குறிசொல்லுவது தான் நியூமராலஜியாகும் - மொழி பெயர்ப்பாளர்). அதை நாம் அறிவோம். நாம் கூறுவது வேறு அடிப்படை யில், ஆனால் மக்கள் நாம் பேசுவதை தவறாக எடுத்துக் கொண்டு, நியூமராலஜி ரீதியில் கருதிக்கொண்டு விடுவார்கள். அது ஒருவிதமான குறிகேட்டலைப் போல் ஆகிவிடும், அது பிசாசினால் உண்டானது. நாம் அதை அறிவோம். அவ்விதமாகத்தான் நீங்கள் அதைப்பற்றி கவனிக்க வேண்டும். 30. இயேசுவை அவர்கள் “பெயல்செபூல்'', 'பிசாசு'' என்று அழைத்தனர். ஏனெனில், அவர்களுடைய சிந்தைகளை அவரால் அறிந்து சொல்ல முடிந்தது. பாருங்கள், ஆனால் அவரோ தேவ னுடைய வார்த்தையாக இருந்தார். எபிரெயர் 4ம் அதிகாரத்தில் “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயுமிருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? அவர் வார்த்தையாயிருந்தார். அவர் ஜீவிக்கிற வார்த்தையாயிருக்கிறார். ஜீவிக்கிற வார்த்தையானவர் நமக்குள் வந்து, அது என்னவாயிருக்கிறதோ, அதே விளைவை நமக்குள் ஏற்படுத்துகிறது. பாருங்கள், அதே கிரியைகளை, ஏனெனில் வேத வார்த்தையாக அது இருக்கிறது. சில வேளைகளில் அடைப்புகளுக்குள் இல்லாதவர்கள், அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள். இன்னொருவர் அதை வியாக்கி யானம் செய்கிறார். அது என்னவாக இருக்கிறது? வார்த்தையானவர் மீண்டும் நம்மில் மாம்சமானதையே அது காட்டுகிறது.  31. பெர்கமு சபையின் தூதன் ஒரு கல்லைப் பலனாக பெறுவான் என்று கூறப்பட்டதை நாம் கண்டோம். அக்கல் வெண்மையான குறிக்கல் ஆகும். அவனுடைய சுய நீதியைக் காட்டுவதல்ல அது. ஆனால் தேவனுடைய நீதியைக் காட்டுவதாக வெண்மை உள்ளது.  32. இக்கல்லின் மேல் ஒரு புதிய நாமம் எழுதப்பட்டிருந்தது. "அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததாக அந்த நாமம் இருந்தது''. அவனைத் தவிர வேறு எவரும் அப்பெயரை அறிந்து கொள்ள முடியாது. அப்பெயர் யோவான் அல்லது பவுல் அல்லது மரியாள், அது அல்லது இது, அது, மற்றது என்று எவராகிலும் சொன்னால், அதை நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில், அது அப்படியிருந்தால், அதைக் குறித்து அவர் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். பாருங்கள்? அது உண்மை. அப்பெயரை பெற்றுக்கொண்ட அவனைத் தவிர வேறு எவருக்கும் அந்நாமம் என்ன என்று தெரியாது. அத்தூதன் அறிந்திருப்பான் அப்பெயர் என்னவென்று. அவன் தன்னோடு அதை வைத்துக் கொள்ள வேண்டும். ஜெயங்கொள்ளுகிற ஒவ் வொரு நபருமே ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொள்கிறார்.  33. ஆபிரகாம், முதலில் ஆபிராம் என்றழைக்கப்பட்டான் என்றும், ஆனால் தேவன் அவனை உபயோகிக்கப் போகிறபொழுது, அவனது பெயரை 'ஆபிரகாம்'' என்று மாற்றியதை கவனித்தீர்களா? அவன் மனைவி முதலில் சாராய் என்று அழைக்கப்பட்டாள். ஆனால் தேவன் அவளை உபயோகிக்கவிருந்தபொழுது, அவளது பெயரை இளவரசி'' என்று அர்த்தம் கொள்ளும் “சாராள்'' என்று மாற்றினார். யாக்கோபில் வந்த மாற்றத்தைக் கவனித்தீர்களா? யாக்கோபு என்றால், “வஞ்சிக்கிறவன்'' என்று அர்த்தம். அவ் வாறே அவன் இருந்தான். ஏசா என்றால், 'சிவப்பான', 'ரோம முள்ள' என்று அர்த்தம். தலை மற்றும் உடல் முழுவதும் சிவப்பான முடியையுடையவனாக ஏசா இருந்தான். அதற்கேற்றபடி அவனது பெயர் இருந்தது. யாக்கோபு என்றால் “வஞ்சிக்கிறவன்'' என்று அர்த்தம். அந்த அர்த்தத்தின்படியே யாக்கோபு இருந்த படியால்தான், ஏசா, 'அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? அவன் வஞ்சிக்கிறவன்'' என்றான். ஆனால் யாக்கோபு கர்த்தரோடு முழுவதும் போராடி மேற் கொண்ட பொழுது, அவன் ஆசீர்வதிக்கப்பட்டு, அவனது பெயர் யாக்கோபு என்னப்படுவதிலிருந்து, இஸ்ரவேல் என்று தேவனால் மாற்றப் பட்டது. இஸ்ரவேல் என்றால், “தேவனோடு அதிபதியாக அல்லது ஆளுகிறவனாக இருத்தல்' என்று பொருள். பவுல், தன்னை பரிசுத்த ஆவியானவர் ஒளியின் வடிவில் அச்சாலையில் அவன் மேல் அடித்து, அவனை கீழேதள்ளி, அவனது பெயரை மாற்றுகிற வரையிலும் அவனது பெயர் சவுலாகத்தான் இருந்தது. அச்சம் பவத்தில் தான் அவனது பெயர் “சவுல்'' என்பதிலிருந்து, ''பவுல்'' என்று மாற்றப்பட்டது. சீமோன் இயேசுவை சந்தித்த பொழுது, அவனது பெயர் “பேதுரு'' என்று மாற்றப்பட்டது.  34. இயேசு ஜெயங்கொண்டபொழுது, அவரது பெயரும் மாற்றப்பட்டது. அவர் தன்னுடைய புதிய நாமத்தை வெளிப் படுத்துவார். ''அவர் ஜெயங்கொண்டது போல் அவரோடுள்ளவனும் ஜெயங்கொள்ளுவான், அவன் ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொள்ளுவான், “என்னுடைய புதிய நாமத்தை நான் அவனுக்கு வெளிப்படுத்துவேன்'' என்று கூறுகிறார். பாருங்கள்? தேவனுடைய ஜனங்களை வழி நடத்திச் செல்வதற்காக எழுப்பப் படும் தலைவர்களான மனிதர்கள் யாவரும் ஜெயங்கொள்ளுகிற படியினால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிய நாமத்தை பெற்றுக் கொள்கின்றனர். இஸ்ரவேல் புத்திரர் அனைவருமே தங்களின் பழைய நாமம் மாற்றப்பட்டு, புதிய நாமத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அது உண்மை . ஆனால் தேவ ஜனங் களுக்கென இருந்த அவர்களுடைய பெரிய தலைவர்கள், தாங்கள் ஜெயங்கொண்டபொழுது, ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொண்டனர். இவை யாவும் சரியாக பிசகாமல் பொருந்து கின்றதைப் பாருங்கள். சரியானபடி பரிபூரணமாக இந்தக் காரியம் உள்ளது.  35. அத்தூதன் "மறைவான மன்னா''வையும் பெற்றுக் கொள்ளு கிறதை நாம் காண்கிறோம். மறைவான மன்னாவானது ஆசாரிப்புக் கூடாரத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் மேசையின்மேல் வைக்கப்படும் சமுகத்தப்பதைக் குறிப்பதாகும். சமுகத்தப்பம் ஆசாரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்யும் ஆசாரியனுக்கு மட்டுமே உரியதாகும். சமுகத்தப்பம் ஆசாரியன் மட்டுமே புசிப்பதற்காகும். அது ஆசாரியனுக்கு என்று, அதாவது தலைவராயிருக்கிறவர்களுக் கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்படுவதாம். அவர்கள் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்க வேண்டும். முழுச் சபைக்கும் மன்னா கிடைத்தது. ஆனால் தூதனுக்கோ விசேஷித்த மறைவான மன்னா கிடைத்தது. அதாவது இயேசுவானவர் யார் என்பதைப் பற்றியும், அவரைப் பற்றி உள்ள காரியம் அனைத்தும் பற்றிய “விசேஷித்த மன்னா'' அல்லது “விசேஷித்த வெளிப்படுத்துதல்" கிடைக்கிறது. பாருங்கள், அத்தூதன் ஜெயங்கொண்டால் அந்த வெளிப்படுத்துதல் கிடைக்கிறது. '... அதைப் பற்றிக் கொள். ஏனெனில் ஜெயங்கொள்கிறவன் எவனுக்கும்''. அவன் ஜெயங்கொண்டிருக்கிறான். தூதனுக்கு இவைகள் எழுதப்பட்டன.  36. இன்றிரவு இதை ஆரம்பிப்போம். “தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில், அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லு கிறதாவது; வெளி.2:18  37. நாம் அவரை துவக்கத்தில், எபேசு சபையின் காலத்தில், அல்லது வெளிப்படுத்தின விசேஷத்தின் துவக்கத்தில், அவருடைய மகிமையடைந்த ஏழுவிதமான தோற்றங்களை யோவான் கர்த்தருடைய நாளில் கண்டதாக நாம் காண்கிறோம்.  38. அவர் இப்பொழுது வருகையில், ஒரு ஆசாரியனாயிருக் கிறார். அவர் இப்பூமியில் இருந்தபோது, ஒரு தீர்க்கதரிசியாக, தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் தன்னுடைய சொந்த இரத்தத்தை எடுத்து பிதாவின் சமூகத்திற்குப் போனார், அது அவரை ஒரு ஆசாரியனாக ஆக்குகிறது. அவர் திரும்பி வருகையில் ஒரு இராஜாவாக இருப்பார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக, ஆசாரியனாக, இராஜாவாக இருக்கிறார். அவர் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் ஒரு கழுகு. அவர் தேவனுடைய ஆசாரியனாக இருந்தார். அவர் ஒரு ஆட்டுக்குட்டி. அவர் திரும்பி வருகையில், அவர் சிங்கமாக, அதாவது இராஜாவாக (யூதா கோத்திரத்து சிங்கமாக) இருந்து ஆளுகை செய்வார்.  39. பரிசுத்த ஸ்தலம் இன்னும் இருந்து கொண்டிருக்கையில், அவரது ஆசாரிய ஊழியமானது இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில் அவர் அங்கே நின்று கொண்டு இருப்பதை நாம் காண்கிறோம். யோவான், தான் கர்த்தருடைய நாளில்'' ஆவிக்குள்ளானதாகக் கூறுகிறான், அது ஏழாம் நாளுமல்ல, ஞாயிற்றுக்கிழமையுமல்ல, அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வேத வாக்கியங்களையெல்லாம் துருவி ஆராய்ந்து பார்த்து, இது மனிதனின் நாள் என்றும், அது கர்த்தருடைய நாள் என்றும், கர்த்தருடைய வருகையின் நாளே அவருடைய நாளாக இருக்கும் என்றும் பார்த்தோம்.  40. யோவானை நாம் கர்த்தருடைய நாளில் காண்கிறோம். அவன் அவரைக் கண்டபோது, அவருடைய ''சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போன்று இருந்த 'தாகக் கூறுகிறான். அவ்விதத் தோற்றம் ஒரு நீதிபதியைக் குறிக்கிறதாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.  41. மற்றொரு காரியம், அவர் அப்பொழுது ஆசாரியனாக இல்லை. ஏனெனில், ஆசாரியன் கச்சையை, பணிவிடை செய் பவனுக்கு அடையாளமாக இடுப்பில்தான் கட்டியிருப்பான். ஆனால் இங்கே இயேசு கச்சையை மார்பருகே கட்டினவராக இருக்கிறார். எனவே இத்தோற்றம் ஒரு நீதிபதியாக அவர் இருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. ஆமென்! அவர் ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறார் என்றும் நாம் காண்கிறோம்.  42. தானியேலின் புத்தகத்திற்கு நாம் பின்னால் திரும்பிச் சென்று, தானியேல் அவரை வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பில், ''சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போன்று இருந்த நீண்ட ஆயுசுள்ளவர்'' என்ற தோற்றத்தில் காண்கிறான் என்று நாம் கண்டோம்.  43. "வெண்மை ''. பழங்காலத்து ஆங்கிலேய நீதிபதிகள், நீதி வழங்குவதற்காக நீதிபதிகளின் ஆசனத்தில் அமருகையில், தங்கள் தலையின் மேல் நீதிபதிகளுக்கு அடையாளமாக இருக்கும் பெரிய வெண்மையான மயிர் டோப்பாவை அணிந்து கொள்வது வழக்கம். கர்த்தருடைய நாளில் அவர் நீதிபதியாக இருக்கையில், யோவான் அவ்வாறு கண்டான். ஆமென்!  44. ''அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போல்'' இருக்கும். ஒரு காலத்தில் அவருடைய கண்கள் மனுஷீக கண்ணீரினால் மங்கிப் போயிருந்தது. மரித்துக் கொண்டிருக்கிற மனி தனைப் பார்த்து அவனுக்காக அவர் கண்ணீர் விட்டுக் கொண் டிருப்பார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அவன் மீண்டும் உயிரடையப் போகிறதை அவர் அறிந்தவராய் இருப்பார். அவர் மனுஷீக பச்சாதாபத்தினால் நிறைந்திருந்தார். ஆனால் அக்கண்களுக்குப் பின்னால், ஒரு மனிதனின் ஜீவியத்திற்குள்ளாக பார்த்து, அவன் யார் என்பதைப் பற்றியும், மற்றும் அவனைப் பற்றி அனைத்து காரியங்களையும் கூறக் கூடிய வல்லமை இருந்தது. அக்கினி ஜுவாலையைப் போன்ற கண்களின் பிரதிபலிப்பாக அது இப்பொழுது வந்தது. என்ன நடக்கிறது என்பதை அறிய பூமி முழுவதும் சுற்றிப் பார்க்கக் கூடிய கண்கள் அவைகள். அப்படி யானால் நியாயத்தீர்ப்பின் நாளில் நீ எங்கே நிற்பாய்? அவருக்கு முன்பாக உங்களுடைய பாவங்கள் வெளியரங்கமாக இருக்கும்.  45. “இருபுறமும் கருக்குள்ள பட்டயம் அவருடைய வாயிலிருந்து புறப்பட்டது'' என்பதை கவனியுங்கள். அது தேவனுடைய வார்த்தையென்று நாம் பார்த்தோம்.  46. அவருடைய பாதங்கள், “பிரகாசமான வெண்கலம்'' ஆக இருந்ததை நாம் பார்த்தோம். அது அவருடைய அஸ்திபாரத்தை'க் குறிக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்து, பாவங்களை தன் மேல் எடுத்துக் கொண்டு, அதைப் பரிகரித்து, தேவனைப் பிரியப் படுத்தினார். அது உண்மை . அவருடைய அஸ்திபாரமே நமது அஸ்திபாரமுமாகும். நான் நிற்கும் கன்மலை கிறிஸ்துதான் (எடி ப்ரூயிட் இவ்வாறு கூறினார்) மற்றெல்லாம் சரியும் மணல்தான் (அது சரிதான்)  47. ஒவ்வொரு சபைக் காலத்தையும் அவர் சந்திக்கையில், அவ் வேளையில், அவர் தனது தெய்வீக பெயர்களில் ஒன்றைக் குறிப் பிட்டே அத்தூதனுக்கு உரைக்கிறார். இப்பொழுது, நாம் இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத் தன்மையைப் பற்றிய வெளிப் பாட்டை, ஏனைய வெளிப்பாடுகளிலிருந்து முதன்மையாக ஏற்கனவே பார்த்தோம். “இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர், நானே முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனாயிருக்கிறேன்'' என்றார். அந்த முதலாவதான வெளிப்பாட்டைப் பாருங்கள். யோவான் தன்னோடே பேசின சத்தத்தைப் பார்க்கும்படி திரும்பினான். அவர் அவனோடே பேசிய முதல்காரியம் என்னவெனில்...  48. எந்தவொரு அரசனும், “நான் இன்னார் பேசுகிறேன்'' என்று தெரியப்படுத்துகிறான். தான் யார் என்பதைப்பற்றி முதலில் கூறி விடுகிறான். உதாரணத்திற்கு: “நான் வில்லியம் பிரன்ஹாம், நான் ஜான் டோ'' இவ்வாறாக முதலில் தெரியப்படுத்துதல்.  49. ''நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக் கிறேன்'' என்று கூறினார். ஓ, என்னே ! அவருடைய தெய்வீகத் தன்மை! இங்கே நாம், அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட ஏழுவிதமான தோற்றங்களைக்கொண்டவராய் இருப்பதை அவரில் காண்கிறோம். ஒவ்வொரு சபைக்காலத்திலும், அவர் இந்த ஏழுவிதமான மகிமையான தோற்றங்களில் ஒன்றை தெரியப் படுத்தி, அச்சபைக் காலத்தை அணுகுகிறார்.  50. இன்றிரவில், அவர், கண்களில் அக்கினி ஜுவாலையுடன் வருகிறார். அவர் இந்த தீயத்தீரா சபைக்காலத்திற்குள்ளாக அவ்வித மான கண்களுடன் உற்று நோக்குகிறார். இக்காலத்தில் தான் சபை யானது கத்தோலிக்க மதக்கொள்கைகளுக்குள்ளும், அஞ்ஞான மதக் கொள்கைகளுக்குள்ளும் விவாகம் செய்து கொண்டது. அதாவது, நிக்கொலாய் மதத்தினரும் அஞ்ஞானிகளும் சேர்ந்து விவாகம் செய்து கொண்டு, முதலாவதாக மதஸ்தாபன சபையைப் பிறப்பித்தது.  51. எபேசு சபை காலத்தில், நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகளாக இருந்தது, பெர்கமு சபை காலத்தில் போதகமாக மாறியது, அது பிலேயாமின் போதகம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேலர் புறப்பட்டுப் போய் மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்வதற்கு பிலேயாம் காரணமாயிருந்தான். (அம் மோவாபியர் இன்றைக்கு இருக்கிற வெதுவெதுப்பான ஸ்தாபன சபை உறுப்பினருக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர்). மோவாப் லௌகீக சபைக்கும், மகத்தான ஸ்தாபன சபைக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. நிக்கொலாய் மதத்தினர் போதகம், சபையில் இருக்கிற அனைத்து, அதிகாரத்தையும் எடுத்துப் போட்டு, அதை குருக்களின் மேல் வைத்து, அவ்வாறு அதை ஒரு சடங்காச் சார மத ஸ்தாபனமாக ஆக்கிவிட்டது என்று தேவன் கூறினார். அவர் கூறினார், “நீ இதை வெறுக்கிறாய், நானும் அதை வெறுக் கிறேன்'' என்று. “நான் அதை வெறுக்கிறேன்! நான் அதை வெறுக் கிறேன்! நான் அதை வெறுக்கிறேன்!'' என்று அவர் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கிறார். இங்கே அது முழு வேகத்தில் வருகிறது. சபையானது எவ்வாறு நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அது மிகவும் சிறுத்துப் போய், இன்றைக்கு நமது சபைக்காலத்தில் இருக்கிற மிகச்சிறிய அளவுக்கு குறுகிவிட்டது என்பதைப் பாருங்கள்.  52. இந்த வெளிப்பாடானது இச்சபைக்கு கிடைத்த நாளில் தான், ரோமாபுரியானது, தனது இடத்திலுள்ள பிரம்மாண்டமான கற்களின் மேல் புல், வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சபையைக் கட்டியிருந்தது. ஆனால் அவர் இந்த சபையினிடம், அவர் அப்பொழுதும் அக்கினி ஜுவாலையைப் போன்ற கண்களுடன் காலங்கள் தோறும் நோக்குகிறார் என்றும், அவரது அஸ்திபாரம் புல், வைக்கோல் அல்ல, உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான, உறுதியான வெண்கலம் என்பதாகக் கூறுகிறார். உறுதியான அஸ்திபாரம் அது. நான் அதை நேசிக்கிறேன். நாம் எங்கே நின்று கொண்டு இருக்கிறோம் என்பதை அறிவோம்.  53. “உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத் தையும்,  உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக் கிறதையும் அறிந்திருக்கிறேன்.'' வெளி.2:19  54. சரி, இச்சபைக்காலத்தில் சபையானது ஏறத்தாழ அறுப்புண்டு போன நிலையில், மிகவும் குறைந்து போன நிலைக்கு ஆகி விட்டது. இக்காலத்தில் அவர்கள் மகத்தான ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களைப் பெற்றிருப்பதிலிருந்து அகன்று, கிரியைகளைச் சார்ந்து கொள்ளும் நிலைக்குப் போய்விட்டார்கள். நாம் நம் முடைய கிரியைகளை சார்ந்திருப்பதை தேவன் விரும்பவில்லை. 55. அது ஸ்தாபன சபையின் அடையாளமாயுள்ளது. “நாங்கள் செல்வி ஜோன்ஸுக்கு விறகு கட்டைகளைக் கொடுக்கிறோம். நாங்கள் இன்னாருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் துணி மணிகளைக் கொடுக்கிறோம்'' என்று சொல்லுகிறார்கள். அது நல்லது தான். ஆனால் நீங்கள், அக்கிரியைகளே உங்களைக் கிறிஸ்தவ ராக்கிடப் போதுமானது என்று அவைகளின் மேல் சார்ந்து கொள்ள வேண்டாம். சகோதரனே, சேவை மனப்பான்மையுடன் கூடிய அக்கிரியைகள் நல்லதுதான். ஆனால் ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் கிடைக்கும் மறு படியும் பிறந்த அனுபவமே தேவை சரி.  56. அச்சபையினர் அன்பு, விசுவாசம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதை விடுத்து, அதற்குப் பதிலாக கிரியைகளையே சார்ந்து கொள்ளத் தலைப்பட்டனர். காலம் செல்லச் செல்ல அவர்கள் அதில் பெருகிக் கொண்டே போயினர். இதனால் ஆவிக்குரிய விஷயங் களில் அவர்கள் மிகவும் குன்றிப் போனவர்களாக ஆகிவிட்டனர்.  57. “உன் கிரியைகளையும், உன் விசுவாசத்தையும், உன் பொறு மையையும்... அறிந்திருக்கிறேன். வெளி.2:19 58. நாம் இப்பொழுது 20ம் வசனத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம். இதைக் கவனியுங்கள்.  'ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.” வெளி.2:20  59. இப்பொழுது, ''ஸ்திரீயானவள்''; நேற்றிரவில் ஸ்திரீ யானவள் எதற்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறாள் என்று பார்த் தோம்? “'சபை'யை எடுத்துக் காட்டுகிறாள் ஸ்திரீயானவள். இங்கே நாம், அவர்கள் “நிக்கொலாய் மதத்தினரின் போதகம்'' மற்றும் ''பிலேயாமின் போதகம்'' என்றும் பார்த்தோம். இப்பொழுது அது யேசபேல்'' ஆக மாறிவிட்டது.  60. இப்பொழுது யேசபேலைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். யேசபேலைப் பற்றிய ஒரு பெரிய வரலாறு உண்டு. அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால், 1 இராஜாக்கள் 16ம் அதி காரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். யேசபேல் ஒரு போதும் ஆபிரகாமின் குமாரத்தியல்ல. அஞ்ஞான ரோமாபுரியாகிய இந்தக் குழுவினரும் ஆபிரகாமின் குமாரத்தியல்ல. நிக்கொலாய் மதத் தினர் என்பவர்கள் குளிர்ந்து போய்விட்ட, சடங்காச்சாரக் கூட்ட மான கிறிஸ்தவர்களாவர். இவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி, தங்களை உண்மையான கிறிஸ்தவர்களிடமிருந்து வேறு பிரித்துக் கொண்டுவிட்டனர். இன்றைக்கு இருப்பது போல், அவர்கள் ஒரு சபையை ஒரு தங்கும் விடுதியைப் போல் ஆக்க அன்று அவர்கள் விரும்பினர். அதில் பரிசுத்த ஆவியே இல்லை. 'அற்புதங்களின் காலம் கடந்துவிட்டது, அது வேறொரு காலத்திற்குரியது. நமக்கு சகோதர ஐக்கியம் கிடைத்திருக்கிறது'' என்கிறார்கள். மேஸன், ஆட் ஃபெலோ (Mason, Odd Fellow) என்னும் இந்நிறுவனங்கள் (சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒருவித சர்வதேச இரகசிய ஸ்தாபனங்களாகும் - மொழி பெயர்ப்பாளர்) அதைத்தான் பிறப்பிக்கின்றன. அதெல்லாம் சரிதான். ஆனால் அவைகள் ஒரு போதும் ஆத்தும இரட்சிப்பை அளிக்கிற இயேசு கிறிஸ்துவிலே நடக்கும் புதிய பிறப்பின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளவே முடியாது. இது சத்தியமாயிருக்கிறது.  61. சரி, இந்த யேசபேல் ஆபிரகாமின் குமாரத்தியல்ல, அது உண்மை . அவள் ஒரு விக்கிரக ஆராதனைக்கார இராஜாவின் மகளாகிய இளவரசியாவாள். அவளது ராஜ குடும்பமானது பாகாலிடத்தில் காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான முறை யில் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவளுடைய தந்தை அஸ்தரோத்து தேவதைக்கு பூசாரியாக இருந்தான். (அஸ்தரோத்து என்னும் பெயரை எப்படி உச்சரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. வரலாற்றில் இருந்து அவளைப் பற்றிய குறிப்பை எடுத்தேன்.) கான்ஸ்டன்டைனைப் போலவே உள்ள உத்தியை ஆகாப் ராஜாவும் பின்பற்றினான். யூதா தேசத்திற்கு அருகாமையில் ஆகாபின் வலுவான தேசமானது அமைந்திருந்தது. எனவே... 62. நேற்றிரவில் கான்ஸ்டன்டைன் என்ன செய்தான் என்று பார்த்தோம்? கான்ஸ்டன்டைன் இரட்சிக்கப்பட்டவனல்ல. அவன் ஒரு அரசியல்வாதி. அவன் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான்? அவன் கிறிஸ்தவர்களை எடுத்துக் கொண்டான். அவர்கள் அவனுக்காக ஜெபிப்பதாகக் கூறினார்கள். (நான் குறிப் பிடும் இக்கிறிஸ்தவர்கள் நிக்கொலாய் மதத்தினர் என்னப்பட்ட வர்களாவர். இவர்களைத் தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). அவர்கள் ஜெபித்து, அதினால் தான் அந்த யுத்தத்தில் ஜெயித்தால், தானும் ஒரு கிறிஸ்தவனாக ஆகிவிடுவதாக உறுதியளித்தான். அவன் இதைப் பற்றி ஒரு சொப்பனங்கண்டான். அதன்பேரில் அவன் தன்னுடைய வீரர்களின் கேடயங்களை வெண் வர்ணம் பூசி, அந்த இராத்திரியில், சிலுவைச் சின்னத்தைப் பொறித்தான். அச்சமயத்தில் தான் நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் (Knights of Columbus) என்ற ஸ்தாபனமானது பிறந்தது. அங்கே தான் அவர்கள் தங்களுடைய நிலையை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் கான்ஸ்டன்டைன் ஒருபோதும் கிறிஸ்வ தவர்களுக்குரிய நிலையை எடுத்துக் கொண்டதேயில்லை. செயின்ட் சோஃபியா சபை என்னப்பட்ட ஒரு நிக்கொலாய் மதஸ்தருடைய சபையின் கட்டிடத்தின் மேல் அவன் ஒரு சிலுவைச் சின்னத்தைப் பொறித்தான். நான் நேற்றிரவு கூறியது போல, வரலாற்றின் பக்கங்களில், கிறிஸ்தவம் போல் தோற்றமளிக்கும் இந்த ஒரு காரியத்தைத் தவிர வேறு எதுவும் கிறிஸ்தவத்திற்குரியதாக அவன் செய்தான் என்று சொல்லும் எதையும் என்னால் காண முடியவில்லை. வேறு அநேக அறிஞர்களும் அதையே கூறுகிறார்கள். அவன் இரட்சிக்கப்பட்டான் என்று கூறும் எந்தவொரு சான்றும் நமக்குக் கிடைக்கவில்லை. அவன் எந்தவிதமான நிலைக்குள் சென்றான்? அவன் செய்ய நினைத்ததென்னவெனில், அவன் ரோமாபுரி முழுவதையும் பார்த்தான்.  63. இப்பொழுது அவனுடைய உத்தியைப் பாருங்கள். இக் காரியம் சம்பவிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வேதத்தில் தேவன் அதைப்பற்றி கூறி உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆகாப் உபயோகித்த அதே உத்தியைத் தான் கான்ஸ்டன்டைனும் கடைப்பிடித்தான். 64. கான்ஸ்டன்டைனின் ஜனங்களில் பெரும்பாலோர் இந்த நிக்கொலாய் மதத்தினரான கிறிஸ்தவர்களாயிருந்தனர். வேறு சிலர் ''பதிதர்கள்'' என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தான் பெந்தெகொஸ்தே அனுபவத்தை உடையவர்கள். அவர்களோ, ''பதிதர்கள், பரிசுத்த உருளைகள்'' என்றும் இன்னும் இன்ன பிற பெயர்களைக் கூறி, பரிகசிக்கப்பட்டனர். அவர்களிடம்தான் உண் மையான அற்புதங்களும் அடையாளங்களும் உண்டாயிருந்தன. ஆனால் லௌகீக சபையோ ஒரு பெரும் ஸ்தாபன சபையாக உரு வெடுத்துக் கொண்டு வந்தது. கான்ஸ்டன்டைன் என்ன செய் தான்? அவன் மிகவும் சாதுரியமானதொரு வேலையைச் செய்தான். அவன் தன்னுடைய அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்கார நண்பர் களையும் கிறிஸ்தவ நண்பர்களையும் ஒன்று சேர்த்து இவ்விரு சபைகளையும் இணைத்து, அஞ்ஞானக் கொள்கைகளை கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்தான். அவ்வாறு பெர்கமு சபையின் காலத்தில் கிறிஸ் தவமும், அஞ்ஞான மதமும் விவாகம் செய்து கொண்டன.  65. இந்த சபைக்கு தேவன் இன்றிரவில் என்ன கூறுகிறார்? ஆகாப் தனது இராஜ்யபாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டி, விக்கிரக ஆராதனைக்காரியாகிய யேசபேலை மணந்தான். அதே காரியம் தான் இங்கும் நடந்தது. தனது இஸ்ரவேலின் இராஜ்யத்திற்கு பலம் சேர்க்க அவன் இவ்வாறு செய்தான்.  66. அதைத்தான் சபைகளும் முயற்சித்துக் கொண்டிருக் கின்றன. அடுத்த ஆண்டில், 1962ல் யாவர்க்கும் ஒத்துப் போகிறதான வேதாகமத்தை அவர்கள் உருவாக்கி வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனித்தீர்களா? கத்தோலிக் கரையும், ப்ராடெஸ்டெண்டுகளையும், யூதர்களையும் பிரியப்படுத் தத்தக்கதான ஒரு வேதாகமமாக அது இருக்குமாம். ஓ, சகோதரனே! அதைப் பற்றிய செய்தியை செய்திப் பத்திரிக்கையில் இருந்து கத்தரித்து வைத்திருக்கிறேன். இன்றிரவில் அதை இங்கே கொண்டு வரவில்லை. அன்றிரவு நான் அதிலிருந்து வாசிக்க நீங்கள் கேட்டீர்கள்.  67. இவ்வாறான காரியங்களை அவர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். தங்களை எண்ணிக்கையில் பெருக்கிக் கொள்ள வேண்டி, தேவனுடைய பரிசுத்தமானவைகளை எடுத்து இஷ்டப்படி வீசியெறிந்து விடுகிறார்கள். சபை அதைத்தான் செய்திருக்கிறது. சபையானது தனக்குள் ஆட்களை சேர்த்துக் கொள்வதற்காக, ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொள்ளுதலின் அடிப் படையில் ஆட்களை சேர்த்துக் கொண்டு, அதன் மூலம் மறு ஜென்ம அனுபவத்தை அடையாத ஆட்களான துரோகிகளை, விசுவாசமில்லாதவர்களைக் கொண்டதாக அது இருக்கிறது. ஆனால் கிறிஸ்துவின் உண்மையான சரீரமாகிய சபையோ ஒரு மத ஸ்தாபனமல்ல, அது புத்திக்கெட்டாத இரகசியமான கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது; அதற்குள் நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானம் பெறுதல் என்னும் ஒரேயொரு வழியாகத்தான் உள்ளே நுழைய முடியும். அது உண்மை! அப்போஸ்தலர்கள் பெற்றிருந்த அதே அடையாளங்களை உண்மையான சபையானது பெற்றிருக் கிறது. அது முற்றிலும் உண்மை .  68. நாம், “நல்லது, நாம் அசெம்ப்ளீ ஸ் ஆஃப் காட் சபையோடு சேர்ந்து கொள்வோம். ஒருத்துவ மக்களோடு (Oneness) சேர்ந்து கொள்வோம், அல்லது இந்த சபையோடு சேருவோம், பாப் டிஸ்டோடு சேருவோம், அல்லது மெதொடிஸ்டு சபையோடு சேருவோம்'' என்று கூறி, அவ்விதமாக நாம் தவறோடு ஒத்துப் போக வேண்டியதில்லை. நாம் கிறிஸ்துவோடு சேரக்கடவோம்! இந்த மதஸ்தாபனங்களினின்றும் விலகி சுயாதீனராகுங்கள். அந்த ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் நன்றாகத்தான் காணப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கென கொள்கைகளும், கோட்பாடுகளும் உள்ளன; நீங்கள் அவர்களுடைய தேசத்திலுள்ள சபையில் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டுமானால் அவர்களுடைய ஜெனரல் ஓவர்சீயரைப் போய் பார்த்து, அவர் அனுமதிக்கிறாரா என்று முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் என்ன போதிக்கிறார்களோ, அதன்படி சரியாக நீங்கள் போதிக்காவிடில், அவர்கள் உங்களை புறம்பாக்கிப் போடுவார்கள். அவர்கள் விருப் பப்படி போதித்தால் அப்பொழுது நீங்கள் வேதத்தோடு நிலைத்திருக்க முடியாது. தேவன் அதைச் செய்ய இயலாது, அவர் அதை வெறுக்கிறார். எந்தவொரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் அவ்வாறே செய்கிறான். அங்கிருக்கிறவர்கள் அநேகர் முற்றிலும், ஊழியம் செய்யவும், ஐக்கியங்கள் கொள்ளவும் வாஞ்சிக் கின்றனர். ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியாது; அவர்களை வெளியே தள்ளிவிடுவார்கள். நல்லது, அவர்கள் உங்களை வெளியே தள்ளினால் தள்ளட்டும், நீங்கள் புறப்பட்டுப் போய் பரிசுத்த ஆவியை எப்படியாகிலும் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் பாருங்கள், அவர்களோ அந்த கோட்பாட்டைப் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள். ஏராளமாக பணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு அதற்கேற்ப நிலைக்கு நீங்கள் போய்விட விரும்புகிறார்கள். 1944ம் ஆண்டில் பாப்டிஸ்டுகள் ஒரு கோஷத்தை எழுப்பினார்கள்; “1944ம் ஆண்டில் புதிதாக இன்னும் ஒரு மில்லியன் மக்களை சேர்த்து எண்ணிக்கையைப் பெருக்குவோம்'' என்கிற கோஷம் அது. அவர்கள் என்ன பெற்றுக் கொண்டார்கள்?  69. லூயிவில் என்ற இடத்தில் அந்த மகத்தான சுவிசேஷகர் பில்லி கிரகாம் அவர்கள் பேசியபொழுது, “நான் ஒரு பட்டணத்திற்குப் போகிறேன், அங்கே 30,000 பேர்கள் என் கூட்டத்தில் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். நான் அடுத்த ஆண்டில் அதே பட்டணத்திற்கு போகும்போது, அவர்களில் 30 பேர் கூட தேற மாட்டார்கள். ஆனால் பவுல் அப்போஸ்தலன் ஒரு பட்டணத்திற்குப் போனால், ஒரு ஆத்துமா அவனது ஊழியத்தில் இரட்சிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பவுல் அதே பட்டணத்திற்கு அடுத்த ஆண்டில் திரும்பிப் போகும் போது, அந்த ஒரு ஆத்துமாவிலிருந்து இன்னும் 30 ஆத்துமாக்கள் அங்கே இரட்சிக்கப்பட்டிருக்கிறதை காணலாம். அந்த ஒன்றிலிருந்து நிறைய பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்று எண்ணிக்கை கூடுகிறது'' என்று கூறினார். இவ்வாறு அவர் ஒரு நல்ல அறிக்கையைப் பண்ணியிருக்கிறார். ஆனால் அவர் பின்வருமாறு கூறியதை சரியென்று நான் விசு வாசிக்கவில்லை. பில்லி கிரகாம்; ''சோம்பேறிச் பிரசங் கியார்களே! நான் அவ்வாத்துமாக்களின் பெயர்களையும், முகவரிகளையும் கொடுத்திருந்தேனே, நீங்களோ அவர்களை நேரில் போய் சந்தித்து அவர்களோடு சம்பாஷிக்காமல், அதற்குப் பதிலாக வெறும் ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டு, உங்கள் காலை மேசையின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு சுகமாக இருந்துவிடுகிறீர்கள்'' என்று கூறினார். 70. இவ்வாறு அவர் வெளிப்படையாகப் பேசியதை நான் மெச்சுகிறேன். ஒரு மனிதன் மாய்மாலக்காரனாக இராமல், தான் என்னவாக இருக்கிறானோ அப்படியே தன்னைக் காண்பித்தால் நான் அப்படிப்பட்டவனையே விரும்புகிறேன். நீங்கள் என்னவாக இருக் கிறீர்களோ, அதைவிட மிஞ்சி எண்ணாமல், உள்ளபடியே எண்ண வேண்டும். அதை நான் விரும்புகிறேன். ஆனால் நான் ஒன்று கூற விரும்புவேன்; “பில்லி அவர்களே! பவுலின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட அந்த ஒரு ஆத்துமாவை வழி நடத்திச் செல்ல அவனுக்கு யார் இருந்தார்கள் என்று உங்களை கேட்க விரும்புகிறேன். பில்லி! நீங்கள் அவ்வாத்துமாக்கள் ஸ்தாபனங்களுக்கு திரும்பிப் போய் கைகுலுக்கிக் கொண்டு வாளாவிருந்து விடுவதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் விழித்திருந்து, 'நான் இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்' என்று அவ்வனுபவத்தில் நிலைத்திருந்து, அவர் மாம்ச சிந்தைக்கு மரித்து அழுகி, பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்க விட்டுவிடுங்கள். அப்பொழுது அவ்வாத்துமா ஆத்தும ஆதாயம் செய்யும்”.  71. சகோதரனே, அப்படிப்பட்ட ஆத்துமா அக்கினிப் பந்தாக இருப்பான். அவனில் உள்ள அக்கினியை உங்களால் அணைக்கவே முடியாது. பெருங்காற்றினால் விசிறிவிடப்பட்டு கோரமாக எரியும் ஒரு வீட்டைப்போல் அவ்வாத்துமா இருக்கும். அதை நீங்கள் அணைக்கவே முடியாது. ஒரு உண்மையான இரட்சிக்கப் பட்ட ஆத்துமாவில் உள்ள அக்கினி எங்கும் பரவுகிறது; அவனால் மௌனமாக இருக்க முடியாது. அவன் அசைந்து கொண்டே யிருப்பான். ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்! ஓ, என்னே! பழங்காலத்துப் பாணியிலான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் ஆத்தமாவை அக்கினிமயமாக்குகிறது. பெருத்த முழக்கத்தோடு வீசும் பலத்த காற்று அவ்வக்கினியை மேலும் பற்றியெரியச் செய்கிறது. அது அமைதியாக இருக்க முடியாது. அவ்விதமான நிலையில், நான் கொஞ்சம் விறகை எடுத்து நெருப்பில் வைத்து விட்டுப் போய்விடுகிறேன். ஆம், ஐயா! அது அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. பவுலின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவை யாரும் வழி நடத்திச் செல்ல வேண்டியதில்லை, ஏனெனில், பவுல் அந்நபரை, தன் சுயத்தில் மரித்து, கிறிஸ்து அவருக்குள் ஜீவிக்கத்தக்க அளவுக்கு கிறிஸ்துவுக்குள் ஆழமாக கொண்டு போய்விட்டுவிடுவான். மீதியை அவர் பார்த்துக் கொள்வார். அது உண்மை! அது தான் செய்யப்பட வேண்டிய காரியம்.  72. பாப்டிஸ்டு சகோதரர்கள் அருமையானவர்கள் தான். ஆனால் இன்னும் ஒரு மில்லியன் மக்களை புதிதாக சேர்ப்பதனால் என்ன பயன்? உங்களுக்கு இன்னும் கூடுதலாக ஒரு மில்லியன் பெயர்கள் தான் கிடைக்கின்றன. சபைப் பதிவேட்டில் எப்படியாவது யாரை யாவது சரிக்கட்டி சேர்த்து, அதில் எழுதிவிடுவது தான் நடக்கிறது. அதெல்லாம் சரிதான், சகோதரரே, ஆனால் தேவையானது என்னவெனில், உலகத்தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர்களே நமக்கு வேண்டும். அவர்கள் இரத்தத் தால் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அடையாள அற்புதங்கள் தங்கள் ஜீவியத்தில் கொண்டவர்களாக இருப்பார்கள்.  73. வரலாற்று நூல்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் யாவருமே 'நிசாயா ஆலோசனை சங்கம்' என்ற புத்தகத்தை வாங்கி, எவ்வாறு அந்த இரத்த சாட்சிகள் பெந்தெகொஸ்தேயின் அக்கினியை விடாமல் பற்றிக் கொண்டிருந்தனர் என்பதை வாசித்துப் பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது சகோதரனே, பாப்டிஸ்ட்டுகளே, மெதோடிஸ்டுகளே, நான் கூறுவது என்ன வெனில், உண்மையான சுத்தமான ஒளியானது ஒரு பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் அல்ல; ஆனால் உண்மையான சுத்தமான ஒளியோ ஒரு பெந்தெகொஸ்தே அனுபவமாயிருக்கிறது. நான் அநேக நாட்கள் இதைப் பற்றி வரலாறுகளை தோண்டி ஆராய்ந்து பார்த்ததில், பெந்தெகொஸ் தேயின் ஜுவாலையானது, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு, இந்தக் காலம் வரை அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. ஆம் ஐயா! ஆனால் அது தள்ளப்பட்டுவிட்டது.  74. “நல்லது, மகத்தான கத்தோலிக்க சபையானது எதிர்ப்பலைகளையெல்லாம் சமாளித்து நிலைத்து நின்றுவிட்டது; அதுதான் உண்மையான சபை என்பதை இதனால் நிரூபிக்கிறது'' என்று அவர்களில் சிலர் கூறுகின்றனர். அவள் நிலைத்து நின்றது ஒன்றும் ஆச்சர்யமானதாக எனக்குத் தென்படவில்லை, ஏனெனில் அச்சபை யின் பின்னால் பக்கபலமாக அரசாங்கமும் மற்றும் ஏனைய சக்திகளும் இருந்தபடியினால் அது நீடித்திருக்க முடிந்திருக்கிறது. ஆனால் மிகவும் அதிசயிக்கத்தக்கதான விஷயம் என்ன வெனில், அந்த சிறுபான்மையினரான சிறுமந்தையானது, புறம்பாக்கப் பட்டும், சிறையில் அடைபட்டும், வாளால் அறுப்புண்டும் இருந்தாலும், அது எவ்வாறு இவ்விதமோசமான நிலையிலும் நீடித்து நிலைநின்றது என்பதுதான். அவர்களுக்குள் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் அசைவாடிக் கொண் டிருப்பதினால் அது நீடித்து நிற்க முடிந்தது. பாதாளத்தின் அனைத்து பிசாசுகளும் அதை ஜெயிக்க முடியாது. “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.' அதனிடத்தில் உண்மையான காரியமானது உள்ளது. மெதோ டிஸ்டு பிரசங்கியார்களுக்கும் இந்தப் பரிசுத்த ஆவியானது கொடுக்கப்பட்டால் இதே காரியம் நடக்கும். அது அவர்களை எழுப்பி அதே விதமான காரியங்களைச் செய்யும். அது ஒரு போதும் தவறாது.  75. அந்த மாய்மாலக்காரனான ஆகாப், பாருங்கள், அங்கே போய், “இப்பொழுது நான் என் இராஜ்யத்தை பெலப்படுத்திக் கொள்ள வேண்டும், அதினால் எனக்கு பெரிய தேசம் உண்டா யிருக்குமே, நான் போய் அந்த இராஜாவின் மகளை விவாகம் செய்து கொள்ளுவேனென்றால், நாம் சிநேகிதராகிவிடலாம்'' என்றெல்லாம் எண்ணினான். அவன் செய்தது என்ன? அவன் தனது சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்டான்.  76. பிராடெஸ்டெண்ட் சபையும் இதே போல் திரும்பிப் போய் கத்தோலிக்க சபையோடு இணைந்து கொண்டு விட்டால், முன்பு நடந்தது போலவே அது இருக்கும். ஆகாப் வாழ்ந்த நாளில் ...  77. நடுநிசி வேளையானது மூன்று தடவைகள் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரவேலின் பிரயாணத்தில் ஆகாபுக்கு நடு இரவு அனுபவம் உண்டாயிருந்தது. இங்கே அது மீண்டும் நடுநிசி வேளையாக இருக்கிறது. அடுத்து நாம் மீண்டும் இக்காலத்தில் நடு நிசி வேளைக்குள் வந்திருக்கிறோம். மூன்று சந்ததிகள் இந்த அனுபவத் துக்குள் கடந்து சென்று விட்டன. இங்கே, இங்கே, இங்கே, ஆக இம் மூன்று காலங்கள் இதற்கு முன்பாக உண்டாயிருந்தது.  78. ஆகாப் தன் ஜனங்களை வலுப்படுத்த வேண்டி, யேசபேலை மணந்து கொள்கிறான் என்பதை கவனியுங்கள். சரியாக அதேவிதமான காரியத்தைத்தான் கான்ஸ்டன்டைனும் செய்தான். அவன் ஒரு பெரிய சபையை நிறுவி, சலவைக் கற்களால் ஆன பலிபீடத்தை உண்டாக்கி, போப் என்ற மனிதனை எடுத்து அவனுக்கு சிரேஷ்டமாக உடுத்து வித்து அவனை அங்கே மேலாண்மையுள்ளவனாக ஏற்படுத்தினான். அந்த அனலில்லாத வெதுவெதுப்பான சபையினருக்கு அவன் ஒரு உயிருள்ள தெய்வமாகக் காட்சியளித்தான். அவர்களால் அவனோடு பேசி, அவர்களுடைய பாவங்களை எடுத்துச் சொல்ல முடிந்தது. அதைப் பற்றி அவர்கள் மகிழ்ந்தனர். அதோடு திருப்தியடைந்து அவர்கள் சென்றனர். நிச்சயமாக! அதுதான்! ஆனால் மறுபடியும் பிறந்த மனிதனுக்கோ, அவர்கள் இவ்வனுபவத்தை அகற்றிவிட்டு, ஜெபங்களை வாசித்து சொல்வது, மற்றும் அஞ்ஞான சடங்குகளை உள்ளே கொண்டு வந்தது உவப்பாயிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்தார்கள். ஜுபிட்டரை விலக்கி அந்த இடத்தில் பேதுருவை வைத்தார்கள். அவர்கள் வணங்கி வந்த வீனஸ் தேவதையே விலக்கிவிட்டு அந்த இடத்தில் மரியாளை வைத்து வணங்க ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ மக்களுக்குள் அஞ்ஞான மூட நம்பிக்கைகள் நுழைந்துவிட்டன.  79. ஆகாப் யேசபேலை மணந்து கொண்டபோது, அதே விதமான காரியத்தையே செய்தான். அவன் இஸ்ரவேலுக்குள் விக்கிரக ஆராதனையை கொண்டு வந்தான். யேசபேல் என்ன செய்தாள்? தீர்க்கதரிசிகளில் எவர் மேலெல்லாம் அவளால் கைபோட முடியுமோ, அவர்களையெல்லாம் அவள் கொன்று போட்டாள். அவள் அப்படிச் செய்யவில்லையா? அதேவிதமாகத்தான் போப்பு களும் செய்தார்கள். உண்மையான கிறிஸ்தவர்களில் யார் மேலெல்லாம் அவர்களால் கைபோட முடியுமோ, அவர்கள் மேல் கைபோட்டு, அவர்களை கொன்றனர்.  80. ஆகாபின் காலத்தில் அக்காலத்திற்குரிய ஒரு நட்சத்திரமாக வயது சென்ற எலியா இருந்தான். ஓ, ஆம், ஐயா! அவர்களுடைய பாவங்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்க அவன் கலங்கிடவேயில்லை. அவன் அந்தக் காலத்திற்குரிய தேவனுடைய நட்சத்திரமாக விளங்கினான். ஒரு சமயம், அவன் “கர்த்தாவே நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்'' என்று சொல்லும் படியான கட்டம் வந்தது. 81. தேவன் அவனுக்கு பிரதியுத்தரமாக, “ஒரு நிமிடம் பொறு எலியா, நான் எனக்காக 700 பேர்களை மீதியாக மறைத்து வைத்திருக்கிறேன். பார்? அவர்கள் எங்கே யுள்ளனர் என்பதை நீ அறிவாயா. பரிசேயர், சதுசேயர், பாப்டிஸ்டு கள், மெதோடிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் ஆகியோர் நடுவில் அவர்கள் மறைந்து உள்ளனர். நான் அவர்களை வெளியே கொண்டு வருவேன். கொஞ்சம் பொறுத்துக்கொள். பார்? அவர்கள் என்னுடைய வர்கள், அவர்கள் இது வரைக்கிலும் பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடவில்லை'' என்று கூறினார். வயது முதிர்ந்த எலியாவோ அந்த நாளுக்குரிய தேவனுடைய சப்தமாக இருந்தான். வேதவாக்கியங்களின்படி நிச்சயமாகவே, எலியாவானவன், இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பாக வரவேண்டிய தேவனுடைய சப்தத்திற்கும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக வரவேண்டிய தேவனுடைய சப்தத்திற்கும் முன்னடையாளமானவனாக இருக்கிறான்.  82. இந்த சின்னத்தனமான யேசபேல் இஸ்ரவேலின் ராணியான போது, தேவனுடைய பலிபீடங்களையெல்லாம் இடித்துப் போட்டு, தன்னுடைய சொந்த பலிபீடங்களையே நிறுவிட வேண்டு மென்று இருந்தாள். அவள் ஒரு விக்கிரகத்திற்கு முன்பாக இஸ்ர வேலரை பணிந்திடும்படி செய்தாள். கான்ஸ்டன்டைனும் கத்தோலிக்க சபையை நிறுவிய போது, அவனும் சரியாக இதேவித மான காரியத்தையே செய்திட்டான். அவன் அஞ்ஞான விக்கிரக ஆராதனைகளை கிறிஸ்தவ சபைக்குள் கொண்டு வந்தான். அவன் கிறிஸ்தவர்களை விக்கிரகங்களுக்கு முன்பாக பணிந்திடும்படி செய்திட்டான். அது மிகவும் சரியாக மீண்டும் ஒரு இருண்ட காலமாக இருக்கிறது. இஸ்ரவேலின் இருண்டகாலம் ஆகாபின் காலத்தில். இப்பொழுது மீண்டும் கிறிஸ்தவ சபையின் இருண்ட காலம், மக்களை விக்கிரகங்களை பணியச் செய்திடும் காலம். எலியா அந்த நாளுக்குரிய நட்சத்திரமாக விளங்கினான்.  83. யேசபேல் அனைத்து இஸ்ரவேலரையும் பாகாலை வணங்கிடச் செய்தாள். அதே காரியத்தைத்தான் தீயத்தீரா சபைக்காலத்திலும் கத்தோலிக்க சபை செய்தது.  84. இங்கே இன்னொரு ஆச்சரியமான காரியத்தை நீங்கள் கண்டுணர நான் விரும்புகிறேன். நான் வரலாற்றையும் பார்த்தேன். இயேசு, அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்கிறாள் என்று கூறினார். 'தன்னை தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளும் (தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும்) யேசபேல் என்ற அந்த ஸ்திரீயானவள்'' என்று குறிப்பிடப்பட் டுள்ளது. கத்தோலிக்க சபையானது தன் ஜனங்கள் வேதத்தை வாசிக்க அனுமதிப்பதில்லை என்பதைப் பாருங்கள். ஏனெனில், வேதத்தை வாசித்து, அதற்குரிய தெய்வீக வழியில் வியாக்கி யானிக்க மதகுரு ஒருவருக்கு மட்டுமே இயலும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.  85. நல்லது, அதுவே தீர்க்கதரிசி என்ற ஊழியத்தினைப் பற்றிய உண்மையான வியாக்கியானம். ஒரு தீர்க்கதரிசியானவன் தேவனுடைய வார்த்தையைப்பற்றிய தெய்வீக வியாக்கியானத்தை தன்னில் கொண்டவனாயிருப்பான். அது முற்றிலும் சரி, ஒரு நபர் ஒரு மனிதனை 'அவர் ஒரு தீர்க்கதரிசி'' என்று அழைத்துவிட்டு, "அவருக்கு தவறான வெளிப்பாடு இருக்கிறது'' என்று எப்படிக் கூற முடியும்? இது நித்திய குமாரத்துவம் உண்டு என்பதைப் போல் இருக்கிறது. பாருங்கள்? பாருங்கள் அது... தீர்க்கதரிசி என்றால், 'தேவனுடைய வார்த்தையை சரியாக வியாக்கியானிக்கிறவன்'' என்று பொருள்; அவனுக்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. அவனுக்கே வார்த்தையைப் பற்றிய வெளிப்பாடு வருகிறது. "தெய்வீக வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி" என்பது தான் தீர்க்கதரிசி என்பதன் அர்த்தம். “உங்களுக்குள் தீர்க்கதரிசி ஒருவன் இருந்தால், கர்த்தராகிய நான் அவனோடு பேசுவேன். அவன் உரைத்தவை சம்பவித்தால் அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள். நான் அவனோடு இருக்கிறேன். அவன் உரைத்தவை சம்பவிக்காவிடில், அப்பொழுது அவனுக்கு செவி கொடுக்க வேண்டாம்'' என்றார். அது தேவனுடைய தெய்வீக வார்த்தையாயிருக்கிறது, கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசிகளுக்கு வருகிறது.  86. அவர்கள் கூறினார்கள்: இந்த சபை "தீர்க்கதரிசினியாக'' இருப்பதாக. இது இப்பொழுது நிக்கொலாய் மதஸ்தினிரிலிருந்து, "அவள்'' என்று ஆகிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைக் கண்டுணர்ந்தீர்களா? அது ''யேசபேல்'' ஆகிவிட்டது. நேற்றிரவில் 'பிலேயாமின் போதகம்'' என்பதை பார்த்தோம். நிக்கொலாய் மதத்தினரின் போதகம் பின்பு ''பிலேயாமின் போதகம்'' ஆக ஆனது.  87. இஸ்ரவேலர் வேசித்தனம் பண்ணக் காரணமாயிருந்தவன் பிலேயாம் தான். நிக்கொலாய் மதத்தினர் இங்கே என்ன செய்தனர்? ஒரு ஸ்தாபன சபையை உருவாக்கினார்கள். அவைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்துப் பார்த்தால் 'அவள்'' ஆகிய சபை கிடைக்கும். நிச்சயமாக அப்படித்தான்! வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் ''திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசி'' என்று கூறப்பட்டது. வேசியான ஸ்திரீயானவள் அவள். அவள் வேசித்தனம் பண்ணிக் கொண்டி ருக்கிறாள், ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறாள், ஜனங்களுக்கு வேதவாக்கியத்தைப் பற்றி தவறாக அர்த்தம் கற் பித்துப் போதிக்கிறாள். அந்தவிதமான அர்த்தமற்ற மதவெறியை விட்டு விலகுங்கள்! அது உண்மையில் மதவெறிதான். அது உண்மை .  88. அவள் தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்வதைப் பாருங்கள். “நாம் தான் சரியானவர்கள்! நாம் தான் ஆலோசனை சங்கம், நாம் தான் லவோதிக்கேயா ஆலோசனை சங்கம், மனிதனின் ஆலோசனை சங்கம், நானும் இன்னின்னதை தீர்மானித்திருக்கிறோம். எனவே நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்'' என்று அவள் கூறுகிறாள். ஆனால் அவள்....  89. எலிசபெத் ஃப்ரேசியர் என்ற அந்தப் பெண்ணைப் பற்றி என்னை அந்த கத்தோலிக்க பாதிரியார் பேட்டி கண்டார். 'கார்டினல் அல்லது பிஷப் அவர்கள் நீங்கள் அந்த ஃப்ரேசியர் பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்களா என்று அறிய விரும்புகிறார்'' என்று கூறினார். ''அவள் இப்பொழுது ஒரு கத்தோலிக்களாக ஆகிக் கொண்டிருக்கிறாள்'' என்றார் அவர். “ஆம் நானும் அதைப்பற்றி கேள்விப்பட்டேன்'' என்று கூறினேன். ''அவளுக்கு நீங்கள் தான் ஞானஸ்நானம் கொடுத்தீர்களா?'' என்று கேட்டார் “ஆம் ஐயா” என்றேன் நான். “எந்தவிதமாக நீங்கள் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டார். "கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில்'' என்று பதிலளித்தேன். (°-ஊ) ''என்ன அர்த்தத்தில் அவ்வாறு கூறுகிறீர்கள்?'' என்று மீண்டும் கேட்டார்.  90. 'வேதம் கூறுகிறபடியான கிறிஸ்தவ ஞானஸ்நானம் கொடுத்தேன். ஞானஸ்நானம் கொடுப்பதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு, அது கிறிஸ்தவ ஞானஸ்நானத்தின் முறையில் தான். வேதத்தில் தண்ணீரில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டவர் ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் பண்ணப்பட்டிருக்கிறார்கள்'' என்று பதிலளித்தேன்.  91. அவர் அதையெல்லாம் எழுதிக் கொண்டே வந்தார். ''கத்தோலிக்க சபையும் அதையே முன்பு செய்து வந்தது தெரியுமா?" என்று அவர் சொன்னார்.  92. ''எப்பொழுது'' என்று நான் கேட்டேன். “என்னிடத்தில் பண்டைக் காலத்திய வரலாற்று நூல்கள் அனைத்தும் உள்ளன. லண்டனிலிருந்தும் இன்னும் வேறு பல இடங்களிலிருந்தும் அவைகளை வரவழைத்து வைத்திருக்கிறேன். இந்த மணி வேளை விரைவில் நெருங்கி வருகையில், ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது. எனவே இவ்வேளையில் இதைப்பற்றி படிக்க நான் அவைகளை வைத்திருக்கிறேன். எனவே வரலாற்றில் எங்கே நீங்கள் சொல்லுகிற மாதிரி நடந்துள்ளது என்பதை அறிய நான் விரும்புகிறேன்'' என்று நான் கூறினேன். "ஓ, அது வேதத்தில் கூறப்பட்டுள்ளது'' என்று அவர் பதிலுரைத்தார். “நீங்கள் அதைச் சொல்லுகிறீர்களா?” என்று கேட்டேன் “இயேசுவே கத்தோலிக்க சபையை ஸ்தாபித்தார்'' என்று கூறினார். ''அப்படியானால் பேதுரு தான் முதலாவது போப் ஆக இருந்தாரா? என்று நான் கேட்டேன். 'அதிக நிச்சயமாக'' என்று அவர் பதிலுரைத்தார்.  93. சபையானது பிழையில்லாதது, அது மாறுவதில்லை என்றும், அனைத்து பூசை பலிகளும் இலத்தீன் மொழியிலேயே கூறப்படுவதால், அது மாற்றமடைய முடியாதது அல்லவா?'' என்று நான் கேட்டேன்.  94. 'அது உண்மைதான்'' என்று பதில் கூறினார்.  95. ''ஆனால் அது முதற்கொண்டு நீங்கள் நிச்சயமாக சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். வேதமானது கத்தோலிக்க வேதம் என்கிறதாய் இருக்குமானால், அப்பொழுது நான் ஒரு ஆதி காலத்து பாணியிலான கத்தோலிக்கனாக இருப் பேன்'' என்று கூறினேன். பாருங்கள்? அது உண்மை . ''அப்பொழுது நானும் ஒரு ஆதி காலத்து பாணியிலான கத்தோலிக்கன்'' என்றேன்.  96. அவர் கூறினார்: ''நல்லது, இப்பொழுது பாருங்கள், வேதமானது வெறும் கத்தோலிக்க சபை சரித்திரத்தைத் தான் கொண்டதாகும். தேவன் தனது சபையில் இருக்கிறார்'' என்று.  97. நான் சொன்னேன், ''தேவன் தன்னுடைய வசனத்தில் இருக்கிறார்'' என்று. அது உண்மை .  98. ''எந்த மனுஷனும் பொய்யன் - என்னுடைய வார்த்தை மட்டும் உண்மையாய் இருக்கிறது.'' இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் இருக்கிறதே, இது ஒன்று தான் அவரே நேரில் தோன்றி உரைத்து யோவானை எழுதச் செய்து, உறுதிப்படுத்திய புத்தகமாகும். அதில் பிரதானமாக, தன்னுடைய தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதையே அவர் செய்திருக்கிறார். அவர் அதை முழுமையாக செய்திருக்கிறார். “எவராவது இப்புத்தகத்திலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டாலோ அல்லது இதோடு ஒன்றைக் கூட்டினாலோ அவனுடைய பங்கு ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும், இப்புத்தகத்தின் வசனங்களை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான்...'' இதிலிருந்து எதையாயிலும் எடுத்துப் போடுகிறவனோ, அல்லது இதோடு எதையாயிலும் கூட்டுகிறவனோ சபிக்கப் பட்டவனாயிருப்பான். அதிலுள்ள அபாயமான விளை – வைப் பற்றிய எச்சரிக்கையைப் பாருங்கள். எனவே அதனோடு எதையும் கூட்டி விடாதீர்கள். அது இருக்கிறவண்ணமாகவே அப்படியே விட்டு விட்டு, தொடர்ந்து செல்லுங்கள்.  99. நீங்கள் தாழ்மையாக இருந்தால், ஆவியானவர் அதை உங்க ளுக்கு வெளிப்படுத்துவார். அதுவே சரியான முறையாகும். அது சிக்கலானதாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. "பிதாவே, நீர் இவைகளை யூத போதகர்களுக்கும், பிஷப்புகளுக்கும், கார்டினல் களுக்கும், ஜெனரல் ஓவர்சீயர்களுக்கும் மறைத்து, கற்றுக் கொள்ள விரும்பும் பாலகருக்கு வெளிப்படுத்தியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்'' என்று கூறி இயேசு பிதாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். எனவே பாருங்கள், உங்களுக்குத் தேவையான தெல்லாம், தேவனைப் பற்றிய வெளிப்படுத்துதல்தான்.  100. அது அவர் கூறியபிரகாரம் தான் வர முடியும். அவர் கேட்டார், “ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" என்று.  101. "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுரு கூறினான்.  102. இயேசு கூறினார்: ''சீமோனே, நீ இதை ஒரு வேதக் கல்லூரியில் கற்றறியவில்லை. யாரும் அதை உனக்குச் சொல்ல வில்லை. அது பரலோகத்திலிருந்து ஒரு வெளிப்படுத்துதலாகத் தான் வருகிறது. இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை.''  103. அப்படியே, ஆதியில் ஆபேலும் வெளிப்படுத்துதலைத்தான் பெற்றான். அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, அது வெளிப்படுத்துதலாகவே இருந்து வந்துள்ளது. அது உண்மை .  104. அது இப்பொழுது ஒரு ''ஸ்திரீ''யாக இருக்கிறதாக நாம் கண்டோம். ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள் (அது சரிதானே? கிறிஸ்து யாருக்காக வருகிறார்? மணவாட்டிக்காகத் தான் - அவளும் ஒரு ஸ்திரீ தான், கற்புள்ள கன்னிகையாக அவள் இருக்கிறாள்). இங்கேயுள்ள இந்த ஸ்திரீயோ தன்னை தேவனுடைய சபை என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளுகிறாள். ஆனால் அவளோ ஐசுவரியத்தினாலும், முத்துக்களினாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள்; அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் நிறைந்த பொற்பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண் டிருக்கிறாள். அம்மதுவை, பூமியின் இராஜாக்கள் அனைவரும் உறிஞ்சிக் குடிக்கும்படி செய்தாள். அது சரியா?  105. இந்த சபைக்காலத்தில் அவள் “யேசபேல்'' என்று அழைக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். யேசபேல், இஸ்ர வேலருடைய இராணியானவுடனே, அவள் இஸ்ரவேலரை அழித்து, தன்னாலான எல்லாவற்றையும் செய்து, தன்னுடைய விக்கிரக தேவர்களின் பலிபீடங்களை எழுப்பினாள். அது சரியா? அதைத் தான் கத்தோலிக்க சபையும் செய்தது. இப்பொழுது இன்னும் மேற்கொண்டும் படிப்போம். இது உங்களை திகைக் வைக்கப்போகிறது, இன்னும் கூடுதலாக நீங்கள் புசிக்கப் போகிறீர்கள்.  "...தன்னைத்தீர்க்கதரிசி என்று சொல்லுகிற... (“நான் மட்டுமே வார்த்தையின் வியாக்கியானி'' என்று அவள் கூறுகிறாள்) என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிர கங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து..." வெளி.2:20)  106. அந்த சகோதரனொருவர், ஏதேன் தோட்டத்தில் இருந்த ''சர்ப்பம்'' மற்றும் ''ஏதேன் தோட்டத்திலுள்ள கனியைப் புசித்தல்'' என்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே இங்கே இயேசு, “புசிக்க'' என்று கூறியபொழுது அது என்ன வென்று பார்த்துக் கொள்ளுங்கள், ஆவிக்குரியபிரகாரமாக. “அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத் தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.  இதோ, நான் அவளைக்கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் (என்னவிதமான கட்டில்? லௌகீக காரியங்கள். அதையே அவள் எதிர்கொள்ளப் போகிறாள்) தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,(அவர்கள் மகா உபத்திரவத்திற்குள் போகப் போகிறார்கள்) அவளுடைய பிள்ளை களையும் கொல்லவே கொல்லுவேன்..." வெளி.2:21-23 107. ஓ! அவளுக்கு என்ன இருக்கிறது? இந்த வயதான பெண்ணுக்கு சில குழந்தைகள் உண்டு. வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம். நேற்றிரவில் இப்பொழுது இங்கிருக்கிற அனைவருமே வந்திருந்தீர்கள் என நினைக்கிறேன். நல்லது, வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் இந்த பழங்காலத்து வேசி அதாவது கத்தோலிக்க சபை, 'வேசி'' என்றும், ''வேசிகளின் தாய்'' என்றும் அழைக்கப்பட்டாள். அவர்கள் பையன்கள் அல்ல, சபைகளாகிய பெண்கள் அவர்கள்.  108. லூத்தரன் சபை மற்றும் இதைப் போன்ற ஏனைய சபைகளும் எங்கிருந்து வந்துள்ளன? எந்தவொரு சபை ஸ்தாபனமும் எங்கிருந்து வந்தது? லவோதிக்கேயா எதிலிருந்து துவங்கியது? நிக்கொலாய் மதத்தினர் முடிவாக ஸ்தாபன சபையை உருவாக்கி அதற்குள் இணைந்தனர், அதே காரியம் தான் மீண்டும் சம்ப வித்துள்ளது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, சகோதரனே. எலியா தன் நாளில் அக்காரியத்திற்கு எதிராக குரல் கொடுத்தான். யோவானும் தன் நாளில் இப்படிப்பட்ட காரியங்களுக்கெதிராக தன் குரலையெழுப்பினான். ஆம், ஐயா! ''ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையா திருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' என்று யோவான் கூறினான். அவர்கள் இவ்வாறாக இருப்பதை தடுக்கமுடியாது.  109. அவளுக்கு பிள்ளைகள் உண்டாயிருந்தார்கள். உண்மையான யேசபேலுக்கு பிள்ளைகள் இருந்தார்களா? ஆம், ஐயா! கவனியுங்கள். "...நான் அவள் பிள்ளைகளைக் கொல்லுவேன்....”  110. என்ன அது? கத்தோலிக்க சபையின் பிள்ளைகள் பிராடெஸ் டெண்டு ஸ்தாபன சபைகளாகும். பாருங்கள்? அது முற்றிலும் உண்மை ; ஏனெனில் அவர்கள் இதே காரியத்தைத்தான் செய் கிறார்கள். நடைமுறைக்கு மாறான, வேதவிரோதமான கத்தோலிக்க ஞானஸ்நானத்திற்குள் பிராடெஸ்டெண்டுகளும் அப்படியே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளார்கள். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குப் பதிலாக கைகுலுக்கிக் கொள்ளுதல் இடம் பெற்றுவிட்டது. "இயேசு கிறிஸ்துவுக்கு" பதிலாக “பிதா குமாரன் பரிசுத்த ஆவி' ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் வேதத் திற்கு முரணான காரியங்களையே செய்கிறார்கள். இப்பொழுதும் அப்படித்தான்! பிராடெஸ்டெண்டுகள் கூட இதே வழியில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  111. அவளுடைய மகள் அத்தாலியாள் என்ற பெயரையுடையவள். யேசபேல், தன் மகள் அத்தாலியாளை, யூதாவின் இராஜா வின் குமாரனாகிய யோராமுக்கு விவாகம் செய்வித்தாள். இதன் மூலம், விரைவாக பாகாலின் பலிபீடங்கள் எருசலேமிலும் கட்டியெழுப்பப்பட்டன. இதை அறிவதற்காக நீங்கள் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டியதில்லை. வேதமே இதைப் பற்றி கூறுகிறது. பாருங்கள்? யேசபேலின் குமாரத்தி அத்தாலியாள், யோசபாத் இராஜாவின் மைந்தன் யோராமை விவாகம் செய்து கொண்டாள். அவளுடைய குமாரத்தியும் தன் தாய் யேசபேலின் வழியில் சீர்கேடாய் நடந்து கொண்டாள்.  112. ஓ, என்னே! இதை உங்களால் கண்டு கொள்ள முடிய வில்லையா? இந்த மதஸ்தாபனங்களெல்லாம் இவ்விதம் நடந்து கொண்டன என்பதைக் கவனியுங்கள், சகோதரரே. இந்த விதமான கிரியை லூத்தரின் காலத்திற்குள்ளாகவும் நுழைந்து, அதேவிதமாக கிரியை செய்து, பரிசுத்த ஆவி வழி நடத்துவதற்கு விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக, ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். பெந்தெகொஸ்தேயும் இதேவிதமாகத் தான் நடந்து கொண்டது. பரிசுத்த ஆவியானவரை அவர் சித்தப்படி தங்களை வழி நடத்திச் செல்லவிடாமலும், அவர் தன் வழியை தங்கள் மத்தியில் கொண்டு இருக்கவிடாமலும், ஒளியானது அவ்வப் பொழுது வந்தபொழுது, அதை வார்த்தையைக் கொண்டு சோதித்துப் பார்த்து, தொடர்ந்து முன்னேறிச் செல்லாமலும் இவர்களும் ஆகிவிட்டார்கள். தங்களை வழிநடத்திச் செல்ல பரிசுத்த ஆவியை அனுமதிக்க அவர்களுக்கு இயலவில்லை. அதற்குப் பதிலாக ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து வந்த தேவனுடைய காரியங்களிலிருந்து தங்களை கத்தரித்துக் கொண்டு விட்டனர். நேராக திரும்பிச் சென்று, அந்தக் காரியத்துடன் தங்களை விவாகத்தில் இணைத்துக் கொண்டு விட்டனர். அந்த காலத்தை நாம் பார்க்கையில், இங்கே நாம் இருக்கிற காலம் வரையிலும் உள்ள பாதையில் என்ன நேரிட்டிருக் கிறது என்பதையும், அங்கே உங்களுக்கு என்ன காத்துக் கொண் டிருக்கிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள். திரும்பிப் போய் யேசபேலின் மார்க்கத்தோடு விவாகம் செய்து கொண்டு விட்டார்கள்! இயேசு இங்கே கூறுகிறார்; இந்த யேசபேல், ''அவள் தன்னை தீர்க்கதரிசியானவள் என்று அழைத்துக் கொள்கிறாள். நான் அவளை உலகத்துக்குரிய விதத்தில் கட்டில் கிடையாக்குவேன். அவளுடைய பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்''. என்னவிதமாக கொல்லுவார்? ஒரு மரணத்தைக் கொண்டு கொல்லுவார்''. (வெளி.2:22ம் வசனத்தில் தமிழ் வேதாகமத்தில், “கொல்லவே கொல்லுவேன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்திலோ, “மரணத்தினால் கொல்லு வேன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்)  113. என்னவிதமாக கொல்லுவார்? அவளுடைய பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவார். அவர்கள் இப்பொழுது மரித்தவர் களாயிருப்பதைப் பாருங்கள். அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்திருக்கின்றனர். அவர்களுக்கு வெளிப்படுத்தல் இல்லை. அவர்களுக்கு தங்களுடைய ஸ்தாபனம் தான் தெரியும், அவர்களுக்கு தங்களுடைய ஸ்தாபனத்தின் ஞான உபதேசம் தான் தெரியும்; அவர்களுக்கு தங்களுடைய சபையின் போதகத்தைப் பற்றித்தான் தெரியும். ஆனால் தேவனைப் பற்றிய அறிவை அடைந்தாக வேண்டும் என்ற கட்டம் வரும்போது அவர்கள் நிலைமை எப்படியுள்ளதென்றால், எப்படி ஒரு ‘ஹாட்டன் டாட்டுக்கு' 'அரேபிய இரவுகள்'' கதையைப் பற்றி தெரிந்திருக் காதோ, அதே போல் இவர்கள் நிலையும் இருக்கிறது (ஹாட்டன் டாட் என்றால், தென்மேற்கு ஆப்பிரிக்காவில், நாடோடியாக அலைந்து திரிந்து ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு திரியும் ஒரு வகை நாடோடிக் கூட்டம் - 'அரேபிய இரவுகள்' என்பது அரேபிய, இந்திய மற்றும் பெர்சியக் கதைகளின் தொகுப்பாகும் – மொழி பெயர்ப்பாளர்). பரிசுத்த ஆவியானவரைப் பற்றி அறிந்து கொள்ளுதல் என்ற நிலை வரும் போது, அவர்கள் அவ்வாறே உள்ளனர். ஆவிகளைப் பகுத் தறிதல், பிசாசுகளைத் துரத்துதல் மற்றும் இது போன்ற காரியங்களை தேவனுடைய ஆவியானவர் செய்யும் பொழுது, அதை “குறி சொல்லுகிறவர்கள்'' என்றும், 'ஒரு பிசாசு'' என்றும் அவர்கள் கூறுவது விந்தையாக இருக்கிறது. "அவர்கள் நமது ஸ்தாபனத் தைச் சேராதவர்கள், அந்த குழுவினரா, ஓ, பூ (Boo)'' என்று கூறி விடுகிறார்கள். அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. அதன் பிறகு அவர்கள் நம்மேல் “இவர்கள் இயேசு நாமக்காரர்கள்'' அல்லது உருளும் பரிசுத்தர்'' என்று பெயர் எழுதி அவ்வாறு பரிகசிக்கிறார்கள். அவர்களுக்கு என்னவென்று தெரியவில்லை.  114. அந்த சங்கதியானது முகத்திரை கிழிக்கப்பட்டு அம்பலப் படுத்தப்படும் நேரம் சமீபமாயுள்ளது. அது முற்றிலும் உண்மை . நான் இங்கே இந்த பிரசங்க பீடத்திற்குப் பின்னால் உங்களுக்கு முன்பாக நின்று கொண்டிருப்பது எவ்விதம் உண்மையாக இருக்கிறதோ, அதே போல், தேவன் நிச்சயமாகவே தன் பிள்ளை களை அதிலிருந்து அசைத்துக் குலுக்கி வெளியே இழுத்து விட்டு விடுவார். பரலோகத்தின் தேவன் அதை அறிவார். நீங்கள் என்னை ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று, கர்த்தருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்கள்; அப்படியெனில், நான் சொல்வதைக் கேளுங்கள். அவர் சமீபமாயிருக்கிறார். ஆம், ஐயா.  115. 'நான் அவளுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய மரணத்தினால் கொல்லுவேன்'' என்று கூறியுள்ளார். அவர்களைப் பாருங்கள்; அங்கே அவர்கள் குளிர்ந்து போய், வெறும் சடங்காச்சாரமுள்ள வர்களாக ஆகிவிட்டார்கள். பாப்டிஸ்டுகளையும், மற்றும் ப்ரெஸ் பிடேரியன்களையும் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளாகவே மரித்தவர்களாயிருக்கிறார்கள். என்ன ...?  116. விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற செய்தியோடு எழுப்புதலைப் பெற்றிருந்த லூத்தர் அவர்கள், அதில் தொடர்ந்து முன்னேறியிருந்திருப்பாரானால், இப்பொழுதுள்ள பெந்தெ கொஸ்தே எழுப்புதல் லூத்தரன் சபையில் வந்திருக்க வேண்டும். வெஸ்லியின் காலத்தில் பரிசுத்தமாகுதல் செய்தியிலேயே பெந்தெகொஸ்தே எழுப்புதலுக்கான வெளிச்சமும் உண்டாயிருந் திருக்கும். பாருங்கள், லூத்தர் அதை தொடர முடியவில்லை. இல்லை, ஐயா! அவர்கள் ஏற்கனவே லூத்தரன் சபையினராக ஆகி விட்ட னர்.  117. அவருக்குப் பிறகு வெஸ்லி வந்தார். வெஸ்லி இறந்த பிறகு என்ன சம்பவித்தது? அவர்கள் வெஸ்லியன், மெதோடிஸ்டு, ப்ரிமிட்டிவ் என்றும் இன்னும் பல்வேறு விதமான மெதோடிஸ்டு சபைகளை ஸ்தாபித்துக் கொண்டு விட்டார்கள். பாருங்கள்? மெதோடிஸ்டுகளுக்கு முந்தி மகத்தான எழுப்புதல் உண்டா யிருந்தது. ஆனால் அவர்கள் தங்களை மத ஸ்தாபனங்களாக ஆக்கிக் கொண்டபிறகு, அக்காலத்தைத் தொடர்ந்து, அன்னிய பாஷைகளில் பேசிக் கொண்டும், வரங்கள் யாவும் சபைக்கு திரும்ப அளிக்கப்பட்டும் இருந்த பெந்தெகொஸ்தே எழுப்புதல் வந்த போது, அதைப்பார்த்து இவர்கள் (மெதோடிஸ்டுகள்) அவர்களை “பிசாசுகள்'' என்றழைத்தனர். அவ்வசைவோடு சேர்ந்து கொள்ள இவர்களால் முடியவில்லை.  118. வெஸ்லியின் காலத்திற்குப் பிறகு வந்த பெந்தெகொஸ்தே என்ன செய்தது? இவர்களும் அதே காரியத்தைத் தான் செய்தார்கள். அவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கிறார்கள்? சந்தேகத் துக்கிடமின்றி அவர்கள் மரித்தவர்களாயிருக்கிறார்கள். ஆம் ஐயா! சரியாக அவ்விதமாகத்தான் உள்ளது? “நான் அவளது பிள்ளைகளை மரணப்படுக்கையில் தள்ளி அவர்களை கொல்லுவேன்'' என்று தேவன் கூறியள்ளார். நான் 22ம் வசனத்தைப் படிக்கிறேன், நீங்கள் அதைப் பாருங்கள். “இதோ நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந் திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே  தள்ளி (மகா உபத்திரவ காலத்திலே)...''  119. அந்தவிதமான நிலைக்குள் தான் அது போய்க் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் நான் சற்று நிறுத்தி நிதானிக்க விரும்புகிறேன். இந்த மகா உபத்திரவத்தின் காலத்திற்குள்ளாக, தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைப் பெற்றிராத புத்தியில்லாத உறங்கும் கன்னியர்கள் தள்ளப்படுவார்கள். அவர்கள் நல்லவர் களாக இருப்பினும், ஆலயத்திற்கு ஒழுங்காக போய் வந்தாலும், ஸ்தாபனங்களைச் சார்ந்து கொண்டவர்களாக ஆகி விட்டனர்; எண்ணெய் வாங்க அவர்கள் வருகிறார்கள். ஆனால் அப்பொழுது காலதாமதம் ஆகிவிட்டபடியினால் அவர்களுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை. எனவே எண்ணெய் இல்லாதபடியினால் அவளை தேவன் மகா உபத்திரவத்திலே தள்ளிவிடுவார். அவள் அதற்குள் செல்வாள். கத்தோலிக்க சபை மகா உபத்திரவ காலத்திற்குள் போகப் போகிறது. அவளுடைய பிள்ளைகள் யாவரும் தங்கள் தாயோடு சேர்ந்து மகா உபத்திரவ காலத்திற்குள் போகப் போகிறார்கள்.  ".... அவர்கள் தங்கள் கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால்...''  120. அதிலுள்ள பிள்ளைகள் அல்ல; ஆனால் அந்த சபையும், அவளுடைய பிள்ளைகளாகிய ஸ்தாபனங்களும், போவார்கள். அதிலுள்ள அப்பாவிகளாக கத்தோலிக்கர்கள், பாப்டிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள், பெந்தெகொஸ்தேயினர் ஆகியோருக்காக நான் பரிதாபப்படுகிறேன். “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?'' என்று கேட்டால், “நல்லது, நான் ஒரு ப்ரெஸ்பிடேரியன்'' என்று பதிலளிக்கிறார்கள். ஓ!  121. 'ஒரு பன்றிக்கு பந்தயக் குதிரைக்குப் போடப்படும் பக்க வாட்டு சேணத்தைப் போட்டு பார்த்து, அப்பன்றி பந்தயக் குதிரை போலுள்ளதே என்று கூறினால் எப்படி அது சம்மந்தா சம்மந்த மில்லாமல் இருக்குமோ, அது போலத்தான் “கிறிஸ்தவரா'' என்று கேட்டால் மேற்சொன்ன ஸ்தாபனப் பெயர்களை பதிலாகச் சொல் வதும் இருக்கும். ஸ்தாபனப் பெயர்களுக்கும் கிறிஸ்தவனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே கிடையாது. உலகத்திலுள்ள இந்த நடைமுறையைப் பற்றி உங்களால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. நான் இதை தமாஷாகக் கூறவில்லை. இந்த இடம் தமாஷ் செய்ய உள்ள இடமல்ல, இது சுவிசேஷத்திற்குரிய இடமாகும். பாருங்கள்? இதை விளக்கிக் கூறவே மேற்சொன்ன உதாரணத்தை இங்கே உபயோகித்தேன். பாருங்கள், அது உண்மை . ஆகவே அவர்கள் கூறுவது கிறிஸ்துவத்திற்கு கொஞ்சம்கூட சம்மந்தம் உடையதல்ல. "நான் பெந்தெகொஸ்தேகாரன்'' என்கிறார்கள்.  122. அதுவும் அப்படித்தான். கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லை. நீங்கள் அவர்களுடைய எண்ணிலடங்கா ஸ்தாபனங்களில் ஒன்றைச் சார்ந்தவராக இருக்கக் கூடும். ஆனால் நீங்கள் மறுபடியம் பிறந்த தேவனுடைய பிள்ளையாக இருக்கிறீர்களா? மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்த போதி லும், அதைப் பற்றி அக்கறைப்படாமல், நீங்கள் பிறரை உண்மை யாகவே உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமா வோடும் நேசிக்கிறீர்களா? தேவனை நீங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நேசிக்கிறீர்களா? நீங்கள் குதிகாலைத் தூக்கிக் கொண்டு கோபத்தோடு ''ஹும்'' என்று கண்டபடி இரைச்சலிட்டுக் கொண்டிருந்தால், பரிசுத்தாவியை எப்பொழுதாவது நீங்கள் பெற்றிருந்தீர்கள் என்றால், அது உங்களை விட்டு அகன்றுவிட்டது என்பதைத்தான் அது காண்பிக்கிறது.  123. கவனியுங்கள்! '.... அவள் தன் கிரியையைவிட்டு மனந் திரும்பாவிட்டால் நான் அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்"  124. ''அவளுடைய பிள்ளைகள்'' என்பது யேசபேலின் பிள்ளைகள் ஆகும். யேசபேல் இப்பொழுது என்ன செய்தாள்? தன் மகளை பிறிதொரு பிரிவாகிய யூதாவுக்குள் விவாகம் செய்து கொடுத்தாள். அதை ஆவிக்குரிய பிரகாரமாக சம்மந்தப்படுத்திப் பார்ப்போம். நான் இதை வரைந்து காண்பிக்க விரும்புகிறேன். இதை மிகவும் கவனமாக கவனிப்போம்.  125. இங்கே யேசபேலும் இஸ்ரவேலும் உள்ளார்கள். மறுபக்கத்தில் இங்கே யூதா கோத்திரம் உள்ளது. இவர்கள் வித்தியாச மானவர்கள். யூதாவுக்கு யோசபாத் இராஜா இருக்கிறான். இந்தப் பக்கம் ஆகாபும், யேசபேலும் உள்ளனர். யேசபேல் உள்ளே வந்து, அனைத்து இஸ்ரவேலரையும் விக்கிரக ஆராதனைக்குள் வழி நடத்தினாள்.  126. கான்ஸ்டன்டைன் நிக்கொலாய் மதத்தினரான (இங்குள்ள குளிர்ந்துபோன சடங்காச்சார சபையினர்) அச்சபையை அஞ்ஞான விக்கிரக ஆராதனைக் கூட்டத்தோடு இணைத்தபோது, அஞ்ஞான விக்கிரகாராதனையின் சாயலை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவமாக அது உருவெடுத்து அதினால் உண்டான கத்தோலிக்க மதமானது, அக்காலத்தில் யேசபேல் செய்ததுபோல் செய்தது. கத்தோலிக்க மக்களே, உங்களைப் புண்படுத்த விரும்பவில்லை. நான் தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். மூடநம்பிக்கைகள், விக்கிரகங்கள் மற்றும் இன்னபிற காரியங்களனைத்தும் கொண்ட தாக கத்தோலிக்க சபை உள்ளது. சரியாக அஞ்ஞான விக்கிரக ஆராதனை மார்க்கத்தின் அச்சு அசலாக அது ஆகியது. அது உண்மை யான காரியம். நான் இந்த நிமிடத்தில் மரித்துக் கொண்டு இருந் தாலும், அது சத்தியமாகத்தான் இருக்கிறது. ப்ராடெஸ்டெண்டுகளும், வேறு பிரிவைச் சார்ந்திருப்பது போல் இருந்தாலும், அதே நிலையில் தான் உள்ளார்கள்.  127. யேசபேல் செய்ததைக் கவனியுங்கள். பிசாசின் வேலையைப் பாருங்கள். யேசபேல் அவனுக்கு முழுவதும் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தாள். எனவே அவள் தன் மகள்களை எடுத்து... யேசபேலுக்கு இங்கே ஒரு மகள் பிறக்கிறாள், அவள் மறுபக்கத்தில் உள்ள யூதாவுக்குப் போய் அந்த பரிசுத்த மனிதனாகிய யோசபாத்தின் மகனை மணந்து கொள்ளுகிறாள். அவ்வாறு மணந்து கொண்டு, தன் தாய் ஏற்படுத்திய அனைத்து பாவமான காரியங் களையும், இங்கே யூதாவுக்குள் கொண்டு வந்துவிடுகிறாள்.  128. ஸ்தாபன சபையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பிய அனலில்லாமல் குளிர்ந்து போய்விட்ட சடங்காச்சார கிறிஸ்தவர்களான நிக்கொலாய் மதஸ்தினர், அஞ்ஞான மதத்தோடு விவாகம் செய்து கொண்டு விட்டனர். அங்கு நடந்தது போலவே இங்கும் நடப்பதைக் கவனியுங்கள். அவர்கள் யேச பேலை விவாகம் செய்து கொண்டு கத்தோலிக்க சபையாகின்றனர். இந்தப் பக்கத்தில் யேசபேல் தன் மகளை (அவளுடைய ஸ்தாபனக் குமாரத்திகள்) எடுத்து இங்கே விவாகம் செய்து கொடுத்து விடுகிறாள். அதே காரியம்தான் இங்கும் நடைபெற்றது. ''அவளுடைய பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்'' - ஆவிக்குரிய மரணத்தினால் கொல்லுவார். அவர்கள் மரணத்துக் கேதுவாக ஸ்தாபன சபையை அமைத்துக் கொண்டு விட்டார்கள். அப்பொழுது பிரதானமாக நடந்தது என்னவெனில், ஆவியானவர் முழுவதும் அகன்று விட்டார்.  129. இங்கே ஐந்து அல்லது ஆறு வரலாற்றாளர்கள் அமர்ந்திருக் கிறீர்கள். உங்களை நான் ஒன்று கேட்கப் போகிறேன். சபைகளில் ஏதாவதொன்று விழுந்து போய், ஸ்தாபனமாக ஆன பிறகு, ஒரு எழுப்புதல் அதில் மீண்டும் ஏற்பட்டு, அவைகள் எப்பொழுதாவது மீண்டும் எழும்பின என்பதை நிரூபிக்கும் வேதபூர்வமான அல்லது வரலாற்று பூர்வமான சான்று ஒன்றை என்னிடம் கொண்டு வந்து காண்பியுங்கள் பார்க்கலாம். அவைகள் ஸ்தாபனமாக ஆனபிறகு எப்பொழுதாகிலும் அவர்களுக்குள் எழுப்புதல் ஏற்பட்டதா? இல்லை, ஐயா! ஆவியானவர் அவர்களை விட்டு நீங்கி விட்டார். நான் பெந்தெகொஸ்தேயினரையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.  130. பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்கள் விழுந்தபோது, முன்காலத்தவரே, நீங்களெல்லாம் அந்நிய பாஷைகளில் பேசினீர்கள். மகத்தான பெந்தெகொஸ்தே அசைவைப் பெற்றிருந் தீர்கள். ஆயினும் அதுவும் விழுந்து போனது. சிலகாலம் கழித்து, நீங்கள் உங்களுக்கு ஜெனரல் கௌன்சில் என்ற ஒன்றை நிறுவிக் கொண்டீர்கள். ஆர்கனிசம் சரிதான். ஆனால் ஆர்கனிசேஷன் சரியல்ல. (ஆர்கனிசம் என்றால் சரீரத்தின் உறுப்புக்கள் ஒருங்கிணைப் பாக இயங்கி ஜீவனோடிருப்பது ஆகும் - மொழி பெயர்ப்பாளர்) பிரதானமான காரியம் என்னவெனில், உங்களால் நிலைத்து நிற்க முடியாமல், பின்னுக்குப் போய், ஸ்தாபனமாக ஆகி, அதின் மூலம் “சாத்தானின் பிள்ளையாக'' ஆகிவிட்டீர்கள்.  131. பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினைப் பற்றிய இன்னொரு கூடுதலான வெளிச்சம் வந்தது. அப்பொழுது அவர்கள் யாவரும் அத்தோடு தேங்கிப் போய் நின்றுவிட்டு, தேவனுக்கு துதியுண்டாவதாக, 'இயேசு'வின் நாமத்தை நீங்கள் பெற்றிராவிடில் நரகத்திற்குப் போவீர்கள். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம். நீங்கள் பெற்றிருக்கவில்லை'' என்று கூறினார்கள். அந்த வெளிச்சம் தொடர்ந்து சபைக்குள்ளாகப் பரவி வளர்ந்து கொண்டே போவதற்குப் பதிலாக, அது தன்னுடைய ஸ்தானத்தை அடைவதற்குப் பதிலாக, நீங்கள் ஸ்தாபனமாக ஆனீர்கள். பாருங்கள்? அதனால் நீங்கள் உங்கள் பாதைகளிலேயே மரித்துக் கிடக்கிறீர்கள். அதைக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டீர்கள். அது என்னவாக இருக்கிறது? அதுவும் யேசபேலின் ஒரு பிள்ளைதான். அவர்கள் யாவரும் ஒருமித்து மரித்துப் போனார்கள்.  132. நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் அல்லது அவர்களைச் சேர்ந்த ஏனையோர் எவராவது, எப்பொழுதாவது, ஒரு பெரிய ஐக்கியமாக இணைந்து எழுப்புதலை பெற்றிருக்கிறார்களா? இல்லவே இல்லை. அந்த கடைசி எழுப்பு தல் சற்று முன்பு ஏற்பட்டது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் 1933ல் அந்த நதிக்கரையில் இறங்கி வந்தார். (அங்கேயிருந்தவர்களில் அநேகர் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்). “மகத்தான தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகள் உலகம் முழுவதையும் அசைக்கப் போகிறது'' என்று தெரியப்படுத்தப்பட்டது. அவ்விதமாக அது நிறைவேறியபொழுது, அது ஒருபோதும் பல்வேறு ஸ்தாபன சபைகள் மூலம் வரவேயில்லை. தேவன் ஸ்தாபனங்களின் எல்லைகளைவிட்டு, வெளியே, ஏறத்தாழ ஒரு அஞ்ஞானியைப் போலுள்ள ஒருவனை எழுப்பி, எழுப்புதலை ஆரம்பித்துவைத்தார். அது என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.  133. ஸ்தாபனங்கள், அவ்வாறு ஸ்தாபனமாக ஆனது முதற் கொண்டே மரித்து விட்டன. ''நான் அவள் பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்'' என்று ஆண்டவர் கூறினார். நான் இதைச் சொல்வதினால் நீங்கள் தயவு செய்து என்னைப் பற்றி மோசமாக எண்ணாதீர்கள். இது சத்தியமென்று நான் அறிந்துள்ளேன். அப்படி யிருக்கையில், நான் இதைப்பற்றி கூறாமற்போனால், நான் ஒரு கீழ்த்தரமான மாய்மாலக்காரனாக ஆகிவிடுவேன். அதற்காக தேவன் என்னை பொறுப்பாளியாக்கி விடுவார். பவுல், “தேவ னுடைய ஆலோசனைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை'' என்று கூறிது போல் நானும் இருக்க விரும்புகிறேன். அது தான் சரியானது. சரி. சரி.  134. அவர்கள் எருசலேமிலும் பலிபீடங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். நீங்கள் இதைக் காணவேண்டுமென்று விரும்பு கிறேன்... யேசபேல் ஆகாபை மணந்து கொண்டபோது, அவள் இஸ்ரவேலுக்குள், அவர்கள் பணிந்து கொள்வதற்காக, விக்கிரகங்களைக் கொண்டு வந்தாள். அதேவிதமாகத்தான் நிக்கொலாய் மதத் தினரின் போதகமும் அஞ்ஞான விக்கிரக ஆராதனையோடு விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞான மார்க்கத்திலுள்ள ஜுப்பிடரை எடுத்துப்போட்டு, அதைப் பேதுருவாக மாற்றி வீனஸ் தேவதையே எடுத்து போட்டு அதை மரியாளாக்கினார்கள். “இஸ்ரவேலர் எல்லோரும் பாவஞ் செய்வதற்கு காரணமாக அவள் இருந்தாள்'' என்று வேதம் கூறுகிறது.  135. அதைப் போலவே கத்தோலிக்க சபையும் தன்னுடைய குமாரத்திகள் யாவரையும் ஒரு ஸ்தாபன அமைப்புக்குள் விவாகம் செய்வித்தாள். யேசபேல் தன் மகளுக்குச் செய்தது போல, அனைத்தும் பாவமான காரியமாக அமைந்துவிட்டது. சரி. குருக் களாட்சி முறை ஏற்பட்ட போது, மூன்றாம் போனிஃபேஸ் என்பவன் போப்பாக தன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான். அவர்கள் சிம்மாசனத்தில் அமர்ந்த ஒரு தேவனைப் பெற்றுக் கொண்டனர். அன்று முதல் அவர்களுக்கு சபையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவசியமில்லாமல் போயிற்று. அது உண்மை. இப்பொழுது அவர்களுக்கு கோட்பாடுகளும், சடங்காச்சாரங்களும் கிடைத்து விட்டன. அதில் அவர்கள் தொடர்ந்து சென்றார்கள்.  136. ஸ்தாபன சபைகள் அதே கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட பொழுது, சபைக்கு பரிசுத்த ஆவியினால் அளிக்கப்பட்டிருந்த சுயாதீனமானது காலின் கீழ் மிதித்துப் போடப்பட்டு அழிக்கப் பட்டது. பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன், மெதோடிஸ்டு மற்றும் இன்ன பிற சபைகள் அந்நிலையில் தான் நிச்சயமாக உள்ளார்கள். இயேசு கூறிய திராட்சைச் செடியைப் போல், அவர்கள் தேவனை விட்டு வெட்டுண்டு போனபோது, வாடி வதங்கி மரித்துப் போய் விட்டார்கள். பரிசுத்த ஆவியினாலே உள்ள அற்புத அடையாளங்களெல்லாம் இப்பொழுது அவர்களுக்கு ஒரு கடந்த கால கதையாக ஆகிவிட்டது. இவர்கள் கத்தோலிக்க சபையை போல் இப்பொழுது ஐசுவரியவான்களாக ஆகிவிட்டார்கள். எனவே அவள் முழு உலகமும் பாவஞ் செய்ய காரணமாகி விட்டாள். ஏனெனில், அவளும் அவளது குமாரத்திகளும் ஒவ்வொரு தேசத்தையும்போய் அடைந்துவிட்டார்கள். அது உண்மை. 137. இப்பொழுது இன்னொரு சபைக்காலத்தில் தேவன் அவளை அழைக்கிற விதத்தைக் கவனியுங்கள். அவர் தன்னுடையவளை அழைப்பதைக் கவனியுங்கள். முடிவில் அவர் வழக்காடி, தன் னுடையவளாகிய மீதியானவர்களை வெளியே எடுப்பதைப் பாருங்கள். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால் மாம்சமான எவரும் இரட்சிக்கப்பட முடியாது. எனவே தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் நிமித்தமாக அவர்களோ எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாக இருப்பார்கள்.  138. வெளிப்படுத்தின விசேஷம் 13:6ல் எழுதப்பட்டுள்ளதைப் போல். அதை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? “இந்த ஸ்திரீ யானவள் யாவரும் ஒரு முத்திரையை (அடையாளத்தைப் பெற் றுக் கொள்ளச் செய்தது). (இந்த மிருகம் இதைச் செய்தது) இந்த மிருகம் தரித்திரர் முதற்கொண்டு சிறியோர், பெரியோர் அனைவரும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளும்படி செய்தது'' இதைச் செய்யப் போவது ரோமன் கத்தோலிக்க சபையேயாகும்.  139. இதையும் செய்தார்கள். அதுவுமல்லாமல், வெளிப்படுத்தின விசேஷம் 13:14ல் கூறியுள்ளபடி ஒரு மிருகத்திற்கு சொருபத்தையும் உண்டாக்கினார்கள். நீங்கள் அதை வாசிக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். இன்னும் நீங்கள் வாசிக்கவில்லையெனில், நாம் அதை எடுத்து வாசிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 13:14. "மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே (அது தான் சபை களின் மகா சம்மேளனம்) பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு (அஞ் ஞான மார்க்கம், அஞ்ஞான ரோமாபுரி போப்பு மார்க்க ரோமாபுரியாக ஆகியது). ஒரு சொரூபம் பண்ண வேண்டு மென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.” வெளி.13:14.  140. பாருங்கள், “அவளுக்கு ஒரு சொரூபத்தை உண்டு பண்ண வேண்டியது''. அது என்னவாக இருக்கும்? அவர்கள் இப் பொழுது சரியாக அதையேதான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சபைகளின் மகா சம்மேளனத்தை உருவாக்கி அதன் மூலம் அந்தக் காரியத்தைச் செய்ய அத்திசையை நோக்கி அசைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ''அனைத்து சபைகளும் இந்த ஸ்தாபனத்தையே சார்ந்ததாக இருக்கின்றன. அவைகள் யாவும் இந்த ஒரு குழுவுக்குள் ஒரு சேர போய்விடும்'. இப்பொழுது அவர்கள் அதற்கான வேதாகமத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். போப் ஜான் அவர்கள் யாவரையும் திரும்பி வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆங்க்லிகன் சபையின் தலைவராகிய ஆர்ச் பிஷப் ஆஃப் காண்டர்பரியும் கூட அங்கே போயிருக்கிறார். முதல் காரியம் என்னவெனில், அவர்கள் அனைவரும் வேசிகளாயிருக்கிறபடியால், தங்கள் தாய் வேசியிடம் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். பாருங்கள்? அவர்கள் கூறுகிறார்கள்: “நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெரியதொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவோம்'' என்று. தேவனே கம்யூனிசத்தை எழுப்பியுள் ளார் என்பது அவர்களுக்குத் தெரியாது. (நான் இந்த வேதாகமத்தைக் கொண்டு அது அப்படித்தான் என்பதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும்). பூமியின்மேல் சிந்தப்பட்ட பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காக பழிவாங்க தேவன் அதை எழுப்பியிருக்கிறார் என்பதை அவர்கள் மனதில் பதித்துக் கொள்ளச் செய்வேன். இஸ்ரவேலைத் தண்டிக்க தேவன் எவ்வாறு நேபுகாத் நேச்சாரை எழுப்பினாரோ, அதைப் போலவே, அதே விதமான நோக்கத்திற்காகவே தேவன் கம்யூனிசத்தையும் எழுப்பியுள்ளார். அவர் கம்யூனிசத்தை எழுப்பினார், ஒரு நாளில், கம்யூனிசம் ரோமாபுரியை உலகப்படத்திலிருந்து இராதபடி, அதின் மேல் குண்டைப் போட்டு வெடித்து சிதறிப் போகச் செய்யும். பாருங்கள்? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி).  141. தரித்திரர், ஐசுவரியவான்கள் முதற்கொண்டு யாவரும் ஒரு அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளச் செய்தாள் என்பதை நாம் இங்கே பார்க்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரான மக்களை அவள் தொடக் கூடாது. அதை நீங்கள் அறிவீர்களா? வெளிப்படுத்தின விசேஷம் 13:8.  142. இதைக் கேளுங்கள், நான் இதை வாசிக்கிறேன். “பின்பு, நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் (அதுதான் அந்த எழு மலைகளாம், நேற்றிரவில் நாம் அதைப் பார்த்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்) பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன.  நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும் அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் (இந்த வலுசர்ப்பம் தான், அந்த ஸ்திரீயின் குழந்தை யைப் பட்சிப்பதற்காக அந்த ஸ்திரீக்கு முன்பாக நின்ற சிவப்பான பிசாசாகும். அது ரோமாபுரியாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்). தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.  அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப் பட்டிருக்கக் கண்டேன்; (அஞ்ஞான மார்க்கத்தைப் பாருங்கள்) ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. (போப்பு மார்க்கம் அதன் இடத்தை எடுத்துக் கொள்கிறது. கிறிஸ்தவ மார்க்கத்தின் வேஷம் தரித்த நிக்கொலாய் மதஸ்தினரோடு சேர்ந்து கொள்ளுகிறது) பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி," வெளி.13:1-3  143. கத்தோலிக்க மதமானது வானத்தின் கீழே உலகின் அனைத்து தேசத்திலும் தீவிரித்து பரவிவிட்டது. அது உண்மை . இரும்பும் களிமண்ணும் ஒன்று சேர்ந்திருப்பதைப் பற்றி தானியேல் கூறினானே, அதைப் போல் தான் இது உள்ளது.  144. 'இரும்பும் களிமண்ணும்'' என்கிற காரியத்தைப் பற்றி ஒரு சிறு விஷயத்தை நான் உங்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் ஏற்கனவே உங்களுக்கு அதைப் குறிப்பிட்டுள்ளேனோ? ஐக்கியநாடுகளின் மகாசபையின் கடைசிக் கூட்டத்தில், ரஷியப் பிரதமர் குருஷ்சேவ் அவர்கள் தன்னுடைய காலணியைக் கழற்றி அதை மேசையின்மேல் அடித்தார். அங்கே ஐந்து கிழக்கத்திய தேசங்களும், ஐந்து மேற்கத்திய தேசங்களும் முக்கியமாக இருந்தன. குருஷ்சேவ் அவர்கள் கிழக்கத்திய தேசங்களுக்கு தலைமை வகித்தார்; ஐசன்ஹோவர் அவர்கள் மேற்கத்திய தேசங்களுக்கு தலைமை வகித்தார். அவர்கள் இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்கள். அவர்கள் தான் அந்த இரு பாதங்கள். குருஷ்சேவ் என்ற ரஷ்ய வார்த்தைக்கு 'களிமண்'' என்று பொருள். ஐசன் ஹோவர் என்ற வார்த்தை அமெரிக்காவில், ஆங்கிலத்தில் "இரும்பு'' என்று பொருள். நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். “அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த (இக் கூடாரத்தில் நம்முடைய அடுத்த செய்தி இதுவே என்பதை அறிந்து கொள்ளுங்கள்) வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும், மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்." வெளி.13:4  145. அதாவது, உதாரணத்திற்கு, ஐசன்ஹோவர் இங்கே அமெரிக் காவில் பெயர் பெற்று விளங்குகிறார். ஆனால் ரோமாபுரியில் அவர் ஒன்றுமில்லை; ரஷியாவிலும் அவருக்கு மதிப்பு இல்லை. அதைபோல் குருஷ்சேவுக்கு ரஷியாவில் மதிப்பு உண்டு, ஆனால் அவருக்கு அமெரிக்காவில் மதிப்பு கிடையாது. ஆனால் ஒரேயொரு மனிதன் இருக்கிறார், அவருக்கு எங்கும் மதிப்பு உண்டு. அவர் தான் போப்பு. (அது உண்மை ). ''நாம் தானே ஸ்தாபனமாக நம்மை ஆக்கிக்கொண்டு ஒன்று சேர்ந்து விடுவோம்'' என்கிறார்கள்.  “பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம் பண்ண (இது தான் உபத்திரவம் எழும்பி வரு கிறதைக் காண்பிக்கிறது) அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத்தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, (''மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்தல்; துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ள வர்கள், சுகபோகப் பிரியர், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்'') அவருடைய நாமத்தையும் (''கர்த்தராகிய இயேசுகிறிஸ்து) நாமத்துக்குப் பதிலாக “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்ளுதல்) அவருடைய வாசஸ்தலத்தையும் பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர் ளையும் தூஷித்தது.  மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி (இதோ உபத்திரவம் எழும்புகிறது) அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரஞ் கொடுக்கப் பட்டது.  உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி யினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்” (ஓ, ஓ, ஓ, ஓ,ஓ) வெளி.13:5-8  146. நம்முடைய நாமங்கள் அப்புத்தகத்தில் இடம் பெற்றிருந் தன என்றால், அவைகள் உலகத்தோற்றத்திற்கு முன்னரே இடம் பெற்று விட்டன. ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட் டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் ஆடுகள் என் சத் தத்திற்கு செவி கொடுக்கின்றன. (அதுதான் உணவு, பாருங்கள்) ''அன்னியனின் சத்தத்திற்கு”...  147. “நல்லது, நான் ஒரு சபையை சேர்ந்து கொண்டு விட்டேன். உன் அளவுக்கு நானும் நல்லவனாய் ஆகிவிட்டேன்'' என்று நீங்கள் கூறலாம். இது ஆடுகளுக்குரிய உணவு அல்ல.  148. இங்கே தானே ஆடுகளுக்குரிய உணவு உள்ளது. ''உன்னதங்களிலே கிறிஸ்துவோடு உட்கார்ந்திருத்தல்''. ஓ, அவர் மிகவும் அற்புதமானவர் அல்லவா?  149. இப்பொழுது நேரம் கடந்து விட்டபடியினால் நாம் சீக்கிரம் முடித்து விடுவோம். நாம் இப்பொழுது 23ம் வசனத்தைப் பார்ப்போம். "அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியை களின்படியே பலனளிப்பேன்.  தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற மற்றவர் களாகிய (என்னவிதமான போதகம் அது? ஸ்தாபனங்கள், பிஷப்புகள், ஆர்ச் பிஷப்புகள், போப்புகள்) உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்." வெளி.2:23-24  150. “இந்தப் போதகத்தை பற்றிக் கொள்ளாமலும்'. மோவாபிய தேசத்தின வழியாக கடந்துவந்த இஸ்ரவேலர் அப்பொழுது ஒரு தேசமாக இன்னும் ஆகவில்லை என்று நேற்றிரவு பார்த்தோம். அவர்கள் பூமியின் மேல் சுயாதீனமுள்ள ஜாதியாராக வாழ்ந் தார்கள். அது சரிதானே? அது ஒரு முன்னடையாளம். அவர்கள் கூடாரங்களில் வசித்து, பரதேசிகளாய் அலைந்து திரிந்தார்கள். அதேவிதமாக பெந்தெகொஸ்தே குழுவினரும், அதாவது உண்மை யான பெந்தெகொஸ்தே குழுவினரும், இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் அலைந்து திரிகிறவர்களாய் இருக்கிறார்கள். “...இந்தப் போதகத்தைப் பற்றிக் கொள்ளாமலும், (தங்களுக் கென ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள்), சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லு கிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற...”  151. சாத்தானுடைய சிங்காசனம் எங்கேயிருக்கிறது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நேற்றிரவில் இதைப் பற்றிய விஷயத்தின் துவக்கத்திற்கே சென்று கவனமாகப் பார்த்தோம். ஆதியில் அவனது சிங்காசனம் எங்கே வைக்கப்பட்டிருந்தது? பாபிலோனில் தான். இராஜா, மதகுரு ஆகிய இரு பதவிகளையுமே வகித்த அந்த பாபிலோனிய இராஜா வானவன், கல்தேய தேசம் பெர்சியரால், ஜெயிக்கப்பட்ட போது, பெர்சியர் இந்த பாபிலோனிய இராஜாவை துரத்திய பொழுது, இந்த கல்தேய (பாபிலோனிய) அரசன் பெர்கமுவுக்கு ஓடிவந்து விட்டான். வந்தவன் அங்கே தன் சிங்காசனத்தை ஸ்தாபித்தான். பாருங்கள், சிநெயாரின் தேசத்திலிருந்து பெர்கமுவுக்கு அவன் தன் சிங்காசனத்தை மாற்றிக் கொண்டு விட்டான். அதைப்பற்றி வரலாற்றிலிருந்து நேற்றிரவில் நாம் வாசித்து அறிந்து கொண் டோம். அங்கேதான் அவன் அதை உருவாக்கினான். கத்தோலிக்க சபை உருவாகியது அங்கேதான். மகா பாபிலோன், வேசிகளின் தாயாகிய கத்தோலிக்க சபைதான் இன்னமும் இருந்து வருகிறது. ''சாத்தானுடைய சிங்காசனம்'', "சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார் களே... நான் உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன்...''  152. 'வேறொரு பாரத்தையும் நான் சுமத்த மாட்டேன்; ஏற்கனவே உள்ளதுக்கு மேலாக வேறு எதுவும் இனி இருக்காது'' இந்த சபைக்காலத்திற்குள் இருந்த அந்த சிறுமந்தையானது எவ்வாறு இருண்ட காலத்திற்குள்ளாக ஒடுக்கி நசுக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். ஏறத்தாழ 1500 ஆண்டுகள் நீடித்திருந்த இருண்ட காலத்திற்குள் அவர்கள் இவ்வாறு நிலைத்து நின்றார்கள். "உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண் டிருங்கள்.'' (அதாவது, இன்னமும் உங்கள் இருதயங் களில் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தைப் பெற்றுள் ளீர்கள். நான் வந்து உங்களுக்கு இளைப்பாறுதலை கொடுக்குமளவும் அதைவிடாமல் பற்றிக் கொண்டிருங் கள். ஏனெனில் இதற்கடுத்த காலமானது அடுத்தபடியாக வருகிறது). வெளி.2:25  “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக் கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு... நான் ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.  "அவன் இருப்புக் கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.'' வெளி.2:26-27 153. பாருங்கள், அந்த அஞ்ஞான விக்கிரகாராதனை சபைக்கெதிராக, இருண்ட காலத்திற்குள்ளாக வந்த அந்த உண்மையான சபையானது நியாயத்தீர்ப்பில் நிற்கையில், அது எவ்வாறிருக்கும், அவர்கள் மோதி கீழே தள்ளப்படுவார்களா? அந்த வெண்கலப் பாதங்கள் அவர்களை மிதித்து நசுக்கிப் போடும் என்று நான் உங்க ளுக்குச் சொல்லுகிறேன். ''மண்பாண்டங்களைப் போல் அவர்கள் நொறுக்கப்படுவார்கள்'' என்று வேதம் கூறுகிறது. “விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.'' (அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா? விடிவெள்ளி நட்சத்திரம் என்பது கிறிஸ்துவைக் குறிக்கும்). ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. வெளி.2:28-29  154. ஓ, என்னே! நீங்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைய வில்லையா? இப்பொழுது சற்று தாமதமாகிவிட்டது. இன்னும் சில விஷயங்கள் உள்ளன, அவைகளை நான் ஒருவேளை நாளை எடுத்துக் கொள்வேன். இந்த இரண்டாயிரம் வருஷங்களைப் பற்றியது அது. அவர் பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமவர் ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்த என் ஆத்தும நேசரவர் அவர் பள்ளத்தாக்கின் லீலி, அவரில் மட்டுமே நான் காண்கிறேன். என்னை சுத்திகரித்து முழுவதும் சுத்தமாக்கவே நான் வேண்டுகிறேன் வருத்தத்தில் அவர் என் ஆறுதல், தொல்லையில் அவர் என் ஆறுதல் தன்மேல் பாரம் யாவையும் வைத்துவிடச் சொல்லுகிறார் அல்லேலூயா அவர் பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமவர் என் ஆத்துமாவுக்கு அவர் ஆயிரம் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். 155. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, நான் நேசிக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன் (நாம் யாவரும் அவரை இப்பொழுது தொழுது கொள்ளுவோம், அவருடைய உடைக்கிற வார்த்தைகளுக்கும், செய்திக்காகவும்) நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தியவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி சிலுவையில்  156. அவர் அற்புதமானவராயிருக்கிறாரல்லவா? நான் அவரை நேசிக்கிறேன். நான் இங்கே கூற இயலாமற்போன விஷயங்கள் யாவும் புத்தகங்களில் இடம்பெறும். ஏனெனில் ஒரு இரவில் சபைக்காலங்கள் அனைத்தையும் பிரசங்கித்துவிட முடியாது. என் தொண்டை சற்று கட்டிவிட்டபடியினால் நான் இன்றிரவில் சற்று பேசுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால், ஓ அவர் அற்புத மானவராயிருக்கவில்லையா? ஓ! எத்திசையினின்றும் மக்கள் கூடி வந்தனர் அவர்தம் இதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததுவே பெந்தெகொஸ்தேயில் விழுந்த அக்கினியால் அது அவர்களை சுத்திகரித்து சுத்தமாக்கியதுவே அது என் இருதயத்திலும் பற்றியெரிகிறது ஓ அவருடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட மிகவும் மகிழ்கிறேன் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடியும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்கிறேன், அல்லேலூயா! அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிட முடிந்ததால்நான் மிகவும் மகிழ்கிறேன். (நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா?) 157. சாட்டானூகா என்ற இடத்திலிருந்து ஓர் இரவு நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நடந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பயணம் செய்த விமானம் டென்னஸி யிலுள்ள மெம்ஃபிஸ் என்ற இடத்தில் தரையிறங்கியது. “இனி அடுத்த நாள் காலை ஏழு மணிக்குத்தான் உங்கள் விமானம் புறப்படும்'' என்று என்னிடம் கூறி, அது வரைக்கிலும் நான் தங்கியிருப் பதற்காக எனக்கு ஒரு மிக அருமையான தங்கும் விடுதியை ஒழுங்கு செய்திருந்தார்கள். 158. நான் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபடியால், எனது நண்பர்களுக்கு சில கடிதங்களை எழுதியிருந்தேன். அவை களை அஞ்சலில் சேர்க்கத்தக்கதாக நான் என் ஹோட்டலை விட்டு வெளியே வந்து, அவைகளை அஞ்சல் பெட்டியில் போட்டேன். அவ்வாறு நான் நடந்து கொண்டு செல்லுகையில் பரிசுத்த ஆவி யானவர் என்னிடம், “நடந்து கொண்டேயிரு'' என்றார். நான் தொடர்ந்து நடந்து கொண்டே சென்றிருந்தேன். அவ்வாறு நடந்து, கருப்பு இன மக்கள் வாழும் பகுதிக்குள் வந்துவிட்டேன்.  159. நான் அங்கே நின்று கொண்டு, எனக்குள், “என்னே! இங்கு பார். விமானம் புறப்பட நேரமாகிவிட்டதே'' என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.  160. பரிசுத்த ஆவியானவரோ, “தொடர்ந்து போய்க் கொண்டே யிரு'' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். அன்றொரு நாளில் அவர் அந்த காட்டில் “நடந்து கொண்டேயிரு” என்று சொன்னாரே, அதைப்போலவே இப்பொழுதும் சொன்னார். எனவே நான் நடந்து கொண்டே போனேன். 161. அப்பொழுது நான் அங்கே உள்பகுதிக்குள் ஏழை கருப்பு இன மக்கள் வாழும் மிகச் சாதாரணமான சிறிய வீடுகளில் ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. அதன் வாயிலில் ஜெமீமா என்னும் பெயருடைய ஒரு வயதான பெண்மணி, தன் தலையில் பையன்கள் அணியும் சட்டை ஒன்றை தலையில் கட்டிக் கொண்டு சாய்ந்து கொண்டு நின்றிருக்கக் கண்டேன். 162. நான் அங்கே இவ்வாறு பாடிக்கொண்டே போய்க் கொண்டிருந்தேன். நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்தால் நான் மிகவும் மகிழ்கிறேன் ஓ அல்லேலூயா! ('நீர் என்ன விரும்புகிறீர் கர்த்தாவே'' என்று கேட்டேன்) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் (ஆவியினால் நடத்தப்படுவதை நீங்களும் விசுவாசிக் கிறீர்களா? ஆம் நிச்சயமாக) நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்கிறேன்.  163. இது நடந்தது 14 ஆண்டுகளுக்கு முன்பாக. அப்பெண்மணி வேலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டே நின்றாள். நானோ தூரத்தில் வந்து கொண்டேருந்தேன். அந்த அம்மாய் என் மேலேயே கண்ணை வைத்து உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந் தாள். நான் பாடுவதை நிறுத்தி விட்டு, தொடர்ந்து நடந்து கொண்டே சென்றேன். அந்த அம்மையாரிடம் நான் நெருங்கி விட்டேன். அப்பொழுது அவள் பருத்த கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவள் என்னை உற்றுநோக்கி, 'காலை வணக்கம், போதகர் அவர்களே'' என்றாள்.  164. நான் அந்த அம்மையாரை நோக்கி, ''எப்படியிருக்கிறீர்கள், ஆண்ட்டி ?'' என்று கேட்டேன். என்னைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக புன்முறுவல் பூத்தாள். “நான் ஒரு பார்சன் என்று எப்படி அறிவீர்கள்?'' என்று கேட்டேன். தெற்குப் பகுதியில், மக்கள் பிரசங்கியாரை “பார்சன்'' என்று அழைக்கிறது வழக்கம், என்பதை நீங்கள் அறிவீர்கள். “நான் ஒரு பார்சன் (போதகர்) என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்?'' என்று கேட்டேன். 165. “நீங்கள் வரப்போகிறதாக முன்கூட்டியே நான் அறிந்து கொண்டேன்'' என்று பதிலளித்தாள்.  166. ''எப்படி அதை அறிவீர்கள்? என்னை உங்களுக்குத் தெரியுமா?'' என்று நான் கேட்டேன். 167. “தெரியாது, ஐயா, நீங்கள் வரப்போவது எனக்குத் தெரியும். சூனேமியாளைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டாள். 168. "ஆம், தெரியும்'' என்றேன்.  169. ''நான் அந்தவிதமானதொரு பெண்மணிதான்'' என்று கூறினாள். அவள் மேலும் கூறினாள்; “கர்த்தர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தார், நான் அவனை சரியானபடி வளர்ப்பேன் என்று அவரிடம் கூறினேன். நான் ஒரு ஏழைப்பெண்மணி. ஜீவனத்திற்காக நான் வெள்ளை நிறத்தவருக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுக்கிறேன். ஆண்டவர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுப்பதாகச் சொன்னார். நான் அவரிடம், அவனை எனக்குத் தெரிந்த அளவுக்கு சிறப்பாக வளர்ப்பேன் என்று கூறினேன். அவ்வாறே நானும் அவனை எனக்குத் தெரிந்த அளவு சிறப்பாக வளர்த்து வரத்தான் செய்தேன். ஆனால் அவனோ, பார்சன் அவர்களே, தவறான கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு விட்டான். அவனுக்கு ஒரு வியாதியுண்டாயிற்று, அது அவனில் முற்றிப் போகிற வரைக்கிலும் நாங்கள் அது என்னவென்றே அறிந்து கொள்ள முடியவில்லை. அவன் இப்பொழுது அவன் படுக்கையில் மரித்துக் கொண்டிருக்கிறான். அவன் இப்பொழுது நினைவிழந்த நிலையில் உள்ளான் மருத்துவர் வந்து பார்த்து, அவனை வியாதியானது அவனுடைய இருதயத்தைக் கூட தின்று விட்டது, அதில் இரத்தத்தோடு வேறு கலந்துவிட்டது, அதனால் மிகுந்த பாதிப்பை அவனில் அது ஏற்படுத்திவிட்டது என்று சொல்லிப் போனார். அவர்கள் கொடுத்த மருந்து ஒன்றும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவன் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு பாவியாக மரிப்பதை என்னால் காண சகிக்க முடிய வில்லை. நான் மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டேயிருந் தேன். இரா முழுவதும் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். கடந்த இரண்டு நாட்களாக அவன் சுய நினைவிழந்த நிலையில் காணப்படுகிறான். அவனைச் சுற்றி நடப்பதொன்றையும் அவன் அறியாத அளவுக்கு அவன் நினைவிழந்து இருக்கிறான்'' என்று கூறினாள்.  170. அவள் மேலும் கூறினாள்; “நான் ஜெபித்தேன்; ஆண்டவரே நீர் அந்தக் குழந்தையை எனக்குக் கொடுத்தீர், அந்த சூனேமியாளுக்குக் கொடுத்தது போல். எங்கே உமது எலியா? அவர் எங்கே இருக்கிறார்? எனக்கு உதவி செய்யக்கூடிய ஒன்று எங்கேயுள்ளது?'' என்று.  171. "நான் முழங்காலில் நின்று ஜெபிக்கையில் உறக்கத்தி லாழ்ந்தேன். அப்பொழுது கர்த்தர் என்னோடு சொப்பனத்தில் பேசினார். அவர் “நீ போய் வாசலருகே நின்று கொண்டிரு. அங்கே ஒரு மனிதன் தன் தலையில் பழுப்புநிற தொப்பியணிந்து மங்கல் நிறமுள்ள சூட் அணிந்தவராய் வீதியில் வருவார். அவர் உன்னிடம் பேசுவார்'' என்று என்னிடம் கூறியிருந்தார்.  172. “நான் விடியற்கால முதற்கொண்டு இங்கேயே காத்து நின்று கொண்டிருக்கிறேன்'' என்றாள். பனியினால் அவளது முதுகுப் பாகம் நனைந்திருந்தது. ''நீங்கள் பழுப்புநிற தொப்பியணிந்து வருகிறதைக் கண்டேன். நீங்கள் ஒரு சிறிய பையைக் கூட உங்களுடன் கொண்டு வந்திருக்க வேண்டுமே'' என்று கேட்டாள்.  173. “நான் அதை எனது ஹோட்டலில் விட்டு விட்டு வந்தேன்'' என்றேன். ''உங்களுக்கு மகனுக்கு சுகமில்லையா?'' என்று கேட்டேன். “அவன் மரித்துக் கொண்டிருக்கிறான்'' என்றாள் அவள். ''என்னுடைய பெயர் பிரன்ஹாம் என்பதாம். என்னை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டேன். “இல்லை ஐயா, பார்சன் பிரன்ஹாம் அவர்களே, நான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லை"  174. “நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறதுண்டு'' என்று மேலும் கூறினேன். அவளோ அதில் ஆர்வம் காட்டவில்லை. அவள் தன் மகன் பாவியாக மரித்துவிடக் கூடாதே என்பதைப் பற்றித்தான் கவலையாயிருந்தாள்.  175. நான் வாயிற்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந் தேன். அக்கதவை திறந்த பிறகு அது தானே திரும்பிப் போய் மூடிக் கொள்ளும், அவ்விதமான அமைப்பைக் கொண்டது அது. வடக்கே உள்ளவர்களுக்கு அதைப்பற்றித் தெரியாது. இரண்டு அறைகளே கொண்ட ஒரு மிகச் சிறிய வீடாக அது இருந்தது. வரவேற்பறை, படுக்கை அறை எல்லாம் ஒரே இடத் திலேயே இருந்தது. சமயலறை பின்னால் இருந்தது. நான் உள்ளே நுழைந்த போது... சுவர்களில் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. பக்கங்களில் மெல்லிய பலகைகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. கூரையில் தார் பூசப்பட்ட கனத்த அட்டையால் வேயப் பட்டிருந்தது. அது பனித்துளியினால் ஏற்பட்டதைப் போல், ஆங்காங்கே நீர்க்குமிழிகள் மேலே தொங்கிக் கொண்டிருந்தன.  176. நான் உள்ளே நுழைந்த பிறகு, கதவுக்கு அப்பால் உள்ளே சுவற்றில், “தேவன் எங்கள் இல்லத்தை ஆசீர்வதிப்பாராக'' என்ற வாக்கியம் தொங்கிக் கொண்டு இருந்தது. இந்த மூலையில் ஒரு பழைய கட்டில் காணப்பட்டது, அந்தப் பக்கம் இன்னொரு கட்டிலும் காணப்பட்டது. அங்கேதானே ஒரு பெரிய உருவம் படுத்திருந்தது. (தரை விரிப்புக்கூட இல்லை). நல்ல தோற்ற முடைய கட்டுமஸ்தான ஒரு பையன் படுத்திருந்தான். அவன் ஏறத்தாழ ஆறடி உயரமும்,179  அல்லது 180 பவுண்டுகள் எடை யுள்ளவனாகவும் இருந்தான் என்று கருதுகிறேன். அவனுடைய கையில் துப்பட்டியை பிடித்துக் கொண்டிருந்தான். அவன் ''ஊ, ஊ'' என்று மெதுவாக முனகிக் கொண்டு இருந்தான்.  177. அவள், ''அம்மாவின் குழந்தையே'' என்று அவனை அழைத்தாள்.  178. "இவள், அம்மாவின் அருமாந்தப் பிள்ளையே' என அழைக்கிறாளே'' என்று வியந்தேன். ஆயினும் அவன் சிபிலிஸ் என்னும் சமூக வியாதியினால் வருந்தி மரித்துக் கொண்டிருந்தான்.  179. அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு, “அம்மாவின் மகனே'' என்று அழைத்து அவனைத் தட்டிக் கொடுத்தாள்.  180. என்னுடைய இருதயம் பெரிதாக விரிவடைந்தது. ''ஆம், நீ எவ்வளவு ஆழமாக பாவத்தில் ஆழ்ந்திருந்தாலும், நீ இன்னமும் அவளுடைய பையன்தான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண் டேன். பிறகு நான் எண்ணினேன்: “பார்த்தாயா, அவன் எவ்வளவு கெட்டவனாயிருந்தாலும் அக்கறையில்லை, அவன் அவனது தாய்க்கு இன்னமும் 'அம்மாவின் குழந்தை'தான். “தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்'' என்று ஆண்டவர் கூறியதைப் பற்றி நான் எனக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டேன். பாருங்கள்? எப்படி முடியும்?  181. அந்த வயதான பரிசுத்தவாட்டி அங்கே நடந்து கொண்டிருந் ததைப் பார்த்தேன். அவளுடைய வீட்டில் ஒன்றுமே இல்லை என்பதை நீங்கள் பார்த்ததும் கண்டு கொள்ள முடியும். சகோ தரனே, ஆனால் அவளிடம், அவளுடைய வீட்டில், ஒரு காரியம் இருந்தது. அது இண்டியானாவிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாகும். அது தான் தேவன். அவள் வீட்டில் அவர் இருந்தார். ஆபாசமான, அருவருக்கத்தக்க, பாலுணர்வைத் தூண்டும்படி தோற்றமளிக்கும் பெண்களுடைய படங்கள் மாட்டப்பட்ட ஆடம்பரமான படாடோபமான வீடு ஒன்று எனக்கு இருப்பதைவிட, தேவனுடைய அப்படிப்பட்ட எளிய வீடு ஒன்றைப் பெற்றிருப்பதையே நான் விரும்புகிறேன். பழைய வேதாகமம் ஒன்று அங்கே திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதின் பக்கங்கள் உபயோகித்து கசங்கிப் போய் பழையதாகிப் போயிருந்தது.  182. நான் அவளை நோக்கிப் பார்த்தேன். அவள், ''தேனே, பிரசங்கியார் உனக்காக ஜெபிக்க வந்திருக்கிறார்'' என்றாள்.  183. அவன் தொடர்ந்து, 'ஊ, ஹூ, இருட்டாயிருக்கிறது'' என்று முனகிக்கொண்டேயிருந்தான்.  184. ''அவன் என்ன கூறுகிறான்?'' என்று நான் கேட்டேன்.  185. "அவன் கூறுவது என்னவென்று அவனுக்கே தெரியாது, மருத்துவர் அவன் தன் சுயபுத்தியில் இல்லை என்று கூறிச் சென்றார். அவன் ஏதோ ஒரு கொந்தளிக்கும் ஆழ்கடலில் ஒரு படகை வலித்துக் கொண்டு போகையில், அவ்வலைகடலில் தான் சிக்கிக் கொண்டதுபோல் உணருகிறான். அதைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை போதகரே. என் மகன் இழந்து போகப் பட்டவனாக, இரட்சிக்கப்படாமல் மரிக்கிறதை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை, நீங்கள் எனக்கு உதவி செய்ய வருவீர்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில் கர்த்தர் என்னிடம் அவ்வாறு கூறினார்'' என்று அவள் கூறினாள். 186. “நான் அவனுக்காக ஜெபிப்பேன், ஒருவேளை கர்த்தர் அவனை வியாதியிலிருந்து குணமாக்குவார்'' என்று நான் சொன்னேன்.  187. வியாதியிலிருந்து மகன் குணமடைய வேண்டுமென்பதைப் பற்றி அவள் சற்றேனும் அக்கறைப்படவில்லை. மகன் எழும்பி நின்று, தான் இரட்சிக்கப்பட்டதாகக் கூற வேண்டும் என்பதைப் பற்றித்தான் அவள் விருப்பங்கொண்டவளாய் இருந்தாள். அவ்வளவுதான், அவன் இரட்சிக்கப்பட வேண்டும். அவன் குணமடைந்தாலும், என்றாகிலும் ஒரு நாள் அவன் போகத்தான் வேண்டும். ஓ, அவ்விதமான ஒரு மனோநிலையை மட்டும் நான் கொண்டிருந்தால் அது எப்படியிருக்கும்! தூரத்தில் நித்திய வீடு ஒன்றுண்டு என்றும், மகன் இரட்சிக்கப்பட்டிருந்தால், அவன் மரித்து விட்டாலும், தான் அங்கே போகும்போது மீண்டும் அவனோடு வாழ்வோம் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.  188. 'அவன் ‘இரட்சிக்கப்பட்டேன்' என்று சொல்வதை நான் கேட்க முடிந்தால் நல்லது'' என்று அவள் கூறினாள்.  189. நான், 'நாம் தலைவணங்கி ஜெபிப்போம்'' என்றேன். அவள் முழங்கால்படியிட்டாள். நான் அவனது பாதங்களை பற்றிக் கொண்டேன். அவனது பாதங்கள் குளிர்ந்துபோய் பிசுபிசு வென்று இருந்தது. அவன் மேல் மெல்லிய துப்பட்டியை அவனது தாய் போர்த்தியிருந்தாள். அவன் அரைக்கால் நிக்கரை அணிந் தருந்தபடியினால் துப்பட்டியை அகற்ற முடியவில்லை.  190. அவன் ஒரு படகில் இருந்து கொண்டு, படகை துடுப்பைக் கொண்டு வலிக்கிறது போல் எண்ணிக் கொண்டு அவ்வாறு கைகளை அசைத்துக் கொண்டிருந்தான். “இங்கு மிகவும் இருளாய் இருக்கிறது, ஊ ஊ மிகவும் இருளாய் இருக்கிறது'' என்று அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான். எனவே அவனது தாய் அவனி டம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவனோ தொடர்ந்து, “இங்கே இருட்டாகவும், குளிராகவும் இருக்கிறது'' என்று சொல்லிக் கொண்டே படகு வலிக்கிறவனைப் போல் செய்து கொண்டேயிருந்தான். 191. பின்பு நான் அவளை நோக்கி, “ஆண்ட்டி , நீங்கள் நம்மை ஜெபத்தில் நடத்துவீர்களா?'' என்று கேட்டேன். 192. அவளும், ''சரி, ஐயா'' என்றாள்.  193. அந்த அறையில், அத்தாயாரும், நானும், அந்தப் பையனும், பரிசுத்த ஆவியானவரும் மட்டும்தான் இருந்தோம். அந்த வயதான பரிசுத்தவாட்டி ஜெபித்தாள். என்னே! அவள் ஆண்டவரிடம் பேசிய பொழுது, ஏற்கனவே அவரிடம் பேசியிருந்தது தெரிய வந்தது. ஆம், ஐயா! தான் யாரிடம் பேசுகிறோம் என்பதை அவள் அறிந்தேயிருந்தாள். ''ஆண்டவரே, நீர் என்ன செய்யப் போகிறீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் யாவும் நீர் முன்னுரைத்த படியே இருந்து கொண்டிருக்கிறது'' என்று ஜெபித்தாள்.  194. ஓ, என்னே ! ஆதியில் அப்பரிசுத்தவான்களுடன் இருந்த அதே இயேசு இப்பொழுதும் இருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கும் அதே இயேசுவாக அவர் இருக்கிறார்.  195. நான் அந்த அம்மாளை, அவள் பாப்டிஸ்ட்டா , அல்லது பெந்தெகொஸ்தேயினரா என்றெல்லாம் விசாரிக்க வில்லை. அது என்னுடைய வேலையாயிருக்கவில்லை. நான் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலை பின்பற்றிக் கொண்டிருந்தேன். அந்த அம்மையாரும் அதையே தான் செய்து கொண்டிருந்தாள். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நாங்கள் காண விரும்பினோம். 196. எனவே நாங்கள் முழங்கால்படியிட்டோம். அந்த அம்மையார் ஜெபிக்க ஆரம்பித்தாள். அவள் ஜெபித்து முடித்த போது, எழும்பி, தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டு, “என் குழந்தையே, தேவன் உன்னை ஆசீர்வதிக்கக்கடவர்'' என்றாள்.  197. “இப்பொழுது நீங்கள் ஜெபிப்பீர்களா, பிரசங்கியாரே'' என்று என்னிடம் கேட்டாள்.  198. 'சரி, அம்மா'' என்றேன் நான். அப்பொழுது நேரம் எட்டரை மணியாகிவிட்டது. ஒருவேளை ஒன்பது மணியாக இன்னும் கால்மணி நேரம் இருந்திருக்கும் என்று நான் நினைக் கிறேன். விமான நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் நான் இருந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய விமானமோ 7 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். எப்பொழுது அங்கிருந்து கிளம்பிச் செல்லப் போகிறேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை. 199. எனவே, நான் என்னுடைய கைகளை அவனுடைய பாதங் களில் மேல் வைத்தேன். நான், “பரம பிதாவே, இது என்ன வென்று எனக்குப் புரியவில்லை. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக நான் விமானத்தில் ஏறிப்போயிருந்திருக்க வேண்டும். நீர் “தொடர்ந்து நடந்து செல்'' என்று கூறிக் கொண்டே யிருந்தீர். இது வரைக்கிலும் நான் இந்தக் காரியத்தைத் தான் கண்டிருக்கிறேன். நான் வருவதைக் குறித்து நீர் காண் பித்ததாகவும், நான் வருவதைக் கண்டதாகவும் அவள் கூறினாள். கர்த்தாவே, நீர்தான் அதைச் சொன்னீர் என்றால், எனக்கு என்ன செய்வதென்று தெரியாது. நான் என்னுடைய கைகளை இந்தப் பையன்மேல் வைக்கிறேன்'' என்று ஜெபித்தேன்.  200. அந்தப் பையன் கூறினான்: "ஓ, அம்மா , இந்த இடத்தில் இப்பொழுது வெளிச்சம் பரவிக் கொண்டிருக்கிறது'' என்று. சுமார் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக படுக்கையின் மேல் பக்கத்தில் அவன் அமர்ந்து கொண்டு தன் தாயாரை தன் கைகளினால் அணைத்துக் கொண்டான். 201. அப்பொழுது நான் அங்கிருந்து மெதுவாக நழுவி வெளியே வேகமாக வந்து, ஒரு வாடகை காரைப் பிடித்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்து எனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு, விமான நிலையத்திற்கு விரைந்தேன். நான் எனக்குள் நினைத்தேன், நான் அங்கு போய் அடுத்த விமானத்தைப் பிடிக்க இரண்டொரு நாட்கள் காத்திருக்க நேரிட்டு விடும் என்று. ஏனெனில் அந்நாட்களில் அவ்வாறான நிலைமை இருந்து வந்தது. உலக யுத்தம் முடிந்ததற்கு பிறகு, உடனே அக்காலத்தில் அங்கெல்லாம் ஒரு விமானத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் மிகவும் கடினமான காரியமாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். “நான் இரண்டு நாட்கள் காத்து இருக்க வேண்டிய தாகுமோ'' என்று எனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  202. நான் அங்கே போய்ச் சேர்ந்ததுமே, 'ஃப்ளைட் எண்:196 லூயிவில் கெண்டக்கிக்கு இப்பொழுது புறப்படப் போகிறது'' என்று அறிவிப்பாளர் அறிவித்துக் கொண்டிருந்தார். அவ்வாறாக தேவன் அவ்விமானத்தை எனக்காக தாமதிக்க வைத்திருந்தார். ஓ, அதை நான் விசுவாசிக்கிறேன். 203. அந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, நான் இரயில் வண்டியில் அரிஸோனாவுக்குப் போய்க் கொண்டிருந் தேன் . சகோதரன் ஷாரிட் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்காக நான் போய்க் கொண்டிருந்தேன். வழியில் நான் சகோதரன் மூர் மற்றும் ஏனையோரோடும் சேர்ந்து கொண்டேன். வழிப்பிரயாணத்தில் மெம்ஃபிஸில் இரயில் வண்டி நின்றது. மேற்கு நோக்கி செல்லும் வண்டிகள் எவ்வாறு அதற்கென உள்ள 'டர்ன் டேபிளில்' போய் சுற்றி திரும்பி நின்று கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியும். (டர்ன் டேபிள் - இரயில் வண்டிகள் வந்த திசையிலிருந்து திரும்பி வேறு ஒரு திசைக்குப் போவதற்காக வண்டிகளை திருப்பிவிடுவதற்காக வசதியாக அமைக்கப்பட் டிருக்கும் வட்ட வடிவமான இரயில் பாதை - மொழி பெயர்ப் பாளர்). அதற்காகத்தான் மெம்பிஸில் வண்டி நின்றது.  204. சாண்ட்விச்சுகளை இரயிலில் வாங்கினால் ஒரு துண்டுக்கு 60 செண்டுகள் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் வெளியில் வாங் கினால் 10 அல்லது 15 செண்டுகள் தான் அதன் விலை. எனவே சாண்விட்சுகள் வாங்குவதற்கு வண்டி நிற்பதற்காக நான் காத் திருந்தேன். பையில் அரைவாசி அளவுக்கு ஹாம்பர்கள் வாங்கி, பயணத்தில் நிச்சயம் படு குஷியடைய எண்ணினேன். எனவே நான் வண்டி நின்றதும், வண்டியைவிட்டு குதித்து இறங்கி விரை வாக ஓடிப்போய் ஹாம்பர்கள் வாங்க கடைகளைத் தேடினேன். அங்கே வண்டி 30 நிமிடங்கள் நிற்கும்.  205. எனவே ஹாம்பர்கள் வாங்க நான் ஆரம்பித்தபோது யாரோ ஒருவன், “ஹெல்லோ , இதோ அங்கே பார்சன் (பிரசங்கியார்) நின்று கொண்டிருக்கிறார்'' என்று கூறும் சத்தம் கேட்டது. நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அங்கே சிவப்பு நிறத்தொப்பி வைத்த ஒருவன் நின்று கொண்டு கண்ணை சிமிட்டிக் கொண்டு என்னையே பார்த்து, 'உங்களுக்கு என்னைத் தெரியுமல்லவா''? என்றான்.  206. "மகனே, நீ யார் என்று தெரியவில்லையே'' என்றேன்.  207. "வாருங்கள், வந்து என்னை நன்றாகப் பாருங்கள்'' என்றான் அவன். 208. 'உன்னை எனக்குத் தெரியும் என்பதை நான் நம்பவில்லை'' என்றேன். 209. 'உங்களை எனக்குத் தெரியும், நீங்கள் பிரசங்கியார் பிரன்ஹாம்'' என்று கூறினான்.  210. “ஆம், அது சரிதான். நீ எப்பொழுதாவது என்னுடைய கூட்டமொன்றில் கலந்து கொண்டிருக்கிறாயா?'' என்று கேட் டேன். 211. “இல்லை, ஐயா. நீங்கள் ஒரு நாள் காலையில் எங்கள் வீட்டிற்கு வந்தீர்களே, என் தாயார் கூட...'' என்றான் அவன். 212. ''ஓ, அந்தப் பையனாக நீ இருக்க முடியாது'' என்றேன். 213. ஆம் ஐயா, நான் தான் அவன், நான் தான் அவன். போதகரே, நான் சுகமானேன். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அது மாத்திரமல்ல, நான் இப்பொழுது ஒரு கிறிஸ்தவனாகவும் ஆகியிருக்கிறேன்'' என்று கூறினான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர்கள் யாவரும் மேல் வீட்டறையில் அவருடைய நாமத்தினால் ஜெபித்தார்கள் ஆவியின் அபிஷேகம் அவர்களில் இறங்கியது சேவைக்கான வல்லமையும் வந்தது அந்நாளில் அவர்களுக்குச் செய்ததை அவர் உங்களுக்கு செய்திடுவார் (நீங்கள் அதைப்பற்றி மகிழ்ச்சியாயிருக்கவில்லையா?) அவர்களில் நானும் ஒருவன் என்பதில் நான் மகிழ்கிறேன் அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன், அவர்களின் ஒருவன் என்று கூறிட நான் மகிழ்கிறேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்று கூறவும் நான் மகிழ்கிறேன்.  214. அவர்களுக்கு பெரிய கல்வி முதலியவை இல்லை. இவர்கள் கல்லாதவராயினும் உலகில் புகழ் பெறாவிடினும் அவர்கள் யாவரும் தங்களின் பெந்தெகொஸ்தேயை பெற்றிருந்தனர். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தனர். அவரின் வல்லமை மாறாமல் உள்ளது என்று எங்கணும் கூறுகின்றனர் அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிட மகிழ்கிறேன் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் நான் அவர்களில் ஒருவன் என்று கூறிட மகிழ்கிறேன் அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் எனக்கானந்தம் நானும் அவர்களில் ஒருவனானதால் வாரீர் என் சகோதரனே, இவ்வாசீர் பெறுவீர் அது உம் இதயத்தை பாவமகற்றி சுத்தி செய்யுமே உம்மில் ஆனந்த மணியோசை ஒலிக்கச் செய்யுமே உம் ஆத்துமாவை ஜுவாலிக்கச் செய்யும். ஓ அது என் உள்ளில் ஜுவாலிக்கிறது ஓ, மகிமை அவர் நாமத்திற்கே நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட மகிழ்கிறேன்  215. யாருடனாவது, உங்கள் முன்னால், பின்னால் சுற்றிலும் உள்ளவரோடு கைகுலுக்கிக் கொள்ளுங்கள். ஓ அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்பதில் எனக்கானந்தமே அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே அல்லேலூயா! நான் அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கானந்தமே 216. பழங்காலத்து மார்க்கம் எது? அது இங்கே ஆரம்பித்தது. அதன் பாதை முழுவதும் காலங்கள்தோறும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. அந்த சுவிசேஷத்திற்காக நான் எவ்வளவாய் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஆம் ஐயா! இரத்தம் வழிந்தோடியதாய், இரத்தம் வழிந்தோடியதாய், பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடுவதாய் உள்ளது. சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் சிந்தினர் (இரத்த சாட்சிகள் உள்பட யாவருடைய) பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடினதாய் இருக்கிறது.  217. அது என்னவிதமான சுவிசேஷமாக இருக்கிறது. அது பெந்தெகொஸ்தேயில் ஆரம்பித்தது. பரிசுத்த ஆவியின் திட்டத்தில் முதல் இரத்த சாட்சி யோவான் ஸ்நானன் தான் (அவன் அதை தன் தாயின் கர்ப்பத்திலேயே பெற்றுக் கொண்டான்) மனிதனைப் போல் மரித்தான் பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார், அவரை சிலுவையிலறைந்தனர் ஆவியானவர் மனிதனுக்கு பாவத்திலிருந்து விடுதலை தருவார் என்று பிரசங்கித்தார் இரத்தம் வழிந்தோடுகிறது, இரத்தம் வழிந்தோடிக் கொண்டே இருக்கிறது. இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடினதாய் இருக்கிறது சத்தியத்திற்காக மரித்த சீஷர்கள் இரத்தம் சிந்தினர் இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தம் வழிந்தோடினதாய் இருக்கிறது.  218. அதை உங்களால் ஸ்தாபனமாக ஆக்க முடியாது. அங்கே பேதுருவும், பவுலும், வாசகனாகிய யோவானும் உண்டு இச்சுவிசேஷம் பிரகாசிக்க அவர் தம் ஜீவனை தந்தனர் இரத்தம் சிந்திய ஆதி தீர்க்கர்களின் இரத்தத்துடன் தங்கள் இரத்தத்தை கலந்தனர் அதனால் மெய் தேவவார்த்தை உண்மையாய் பரவியது இரத்தம் வழிந்தோடுகிறது, இரத்தம் வழிந்தோடுகிறது, பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் வழிந்தோடுகிறது சத்தியத்திற்காக மரித்த சீஷர் தம் இரத்தம் சிந்தினர் இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் வழிந்தோடுகிறது பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் கூப்பிடுகின்றனர் தீங்கிழைத்தோரை கர்த்தர் தண்டிக்கும் காலம் இன்னும் எது வரைக்கும் என்கின்றனர் ஆனால் அவருக்காய் ஜீவனின் இரத்தம் சிந்த வேண்டுவோர் இன்றும் உள்ளனர். இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்தில் இரத்தம் வழிந்தோடுகிறது. இரத்தம் பாய்ந்தோடுகிறது, இரத்தம் பாய்ந்தோடுகிறது இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் வழிந்தோடுகிறது சத்தியத்திற்காக இரத்தம் சிந்திய சீஷர் மரித்தனர் இப்பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்தில் இரத்தம் வழிந்தோடுகிறது.  219. பெந்தெகொஸ்தேயின் நாள் முதல், பெந்தெகொஸ்தேயில் பலியாகிய இரத்தசாட்சிகள் இருந்தனர். எபேசு சபைக்காலம் முதல், தொடர்ந்து வந்த காலங்களில், பெர்கமுவிலும், தியத்தீரா விலும், சர்தையிலும், லவோதிக்கேயாவிலும் அப்படியே இருந்தது. இப்பொழுது முடிவாக என்ன சம்பவிக்கப் போகிறது? வேதம் கூறுகிறபடி யாவும் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த மிருகமானது அமெரிக்காவில் தோன்றும்.  220. 1933ம் ஆண்டு ஏற்பட்ட தரிசனத்தைப் பற்றி இங்கே வாசிக்கப்பட்டதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? அப்பொழுது சபைக்கட்டிடமானது கட்டப்படக்கூட இல்லை. அப்பொழுது தரிசனம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அது ஒரு “மெய்மறந்த'' (trance) நிலை என்று அழைத்தேன். நான் அப்பொழுது வெறும் ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாராக மட்டுமே இருந்து வந்தேன்.  221. என் வாழ்நாள் முழுவதும் அத்தரிசனங்களை கண்டுள்ளேன். அவைகளில் ஏதாவது ஒன்று தவறிப் போனது என்று யாராகிலும் எழும்பி சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு பொழுதும் அப்படியாகவில்லை. அது ஒருபோதும் தவறமுடியாது. இனியும் தவறவும் முடியாது.  222. நான் அன்று ஞாயிற்றுக் கிழமை வேதபாடத்தை ஆரம்பிக்கையில், உடனே எனக்குத் தரிசனம் உண்டானது. சபை ஆராதனையை அப்பொழுது, சார்லி கர்ன் என்பவருடைய இடத்தில், மேஸன்கள் கூடி வரும் பழைய அந்த வீட்டில் வைத்திருந்தோம். நாங்கள் ஒரு சிறு கூட்டமாக அங்கே வருவோம். நான் அத்தரிசனத்தில் இந்த ஜனாதிபதி ரூஸ்வெல்ட் உலகை, ஒரு உலகயுத்தத்திற்குள் நடத்திச் செல் வதைக் கண்டேன். அது அப்படியாக முன்னுரைக்கப்பட்டது. ''மூன்று விதமான “இஸம்”கள் தோன்றும், ஒன்று நாஜிக் கொள்கை, இன்னொன்று பாசிசக் கொள்கை, மூன்றாவது கம்யூனிசக் கொள்கை'' என்று நான் அப்பொழுது சொன்னேன்... (எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்?) நான் கூறினேன்; ''உங்கள் கண்களை கம்யூனிசத்தின் மேல் பதித்துக் கொள்ளுங்கள். அவை யாவும் அதில் தலையெடுக்கும். முஸோலினி எத்தியோப்பி யாவின் மீது படையெடுத்துப் போய், அங்கே வீழ்வான். நாம் முடிவாக ஜெர்மனியோடு யுத்தத்திற்குப் போவோம். ஜெர்மனி மேகினாட்லைன் என்ற உறுதியான காங்க்ரீட் சுவரினால் அரணையேற்படுத்திக் கொள்ளும்'' என்றெல்லாம் முன்னுரைக்கப் பட்டது. மேகினாட்லைன் கட்டப்படுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே அது முன்னுரைக்கப்பட்டது.  223. ''யுத்தத்தின் முடிவில் நாம் வெல்வோம், அந்த யுத்தம் முடிந்த பிறகு விஞ்ஞானம் பெரிய பெரிய புதிய காரியங்களையெல்லாம் கண்டு பிடிக்கும்'' என்று உரைக்கப்பட்டது. அத் தரிசனத்தில் நான், அவர்கள் வடிவமைக்கும் மோட்டார் வாகனம் முட்டையைப்போல் வடிவம் பெற்று, (1933ம் ஆண்டில் ஒரு மோட்டார் வாகனம் எவ்விதமான உருவமைப்பு இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது அவர்கள்...) இருக்கும் என்பதை கண்டேன். அது பெரிய நெடுஞ்சாலையில் ஓடுகையில், அதற்கு ஸ்டியரிங் சாதனம் வண்டியை ஓட்டிச் செல்ல இருக்க வில்லை. அது ஏதோ சக்தியினால் இயக்கப்பட்டது என்று தரிச னத்தில் கண்டேன். இப்பொழுது அவர்கள் அதை உருவாக்கியிருக்கிறார்கள்.  224. ''அந்த காலத்தில் பெண்கள் வாக்கு அளிக்க உரிமை அளிக்கப்படுவர், அது முடிவில்...'' இத்தேசம் ஸ்திரீயின் தேசம். அது ஒரு ஸ்திரீக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசனம் யாவற்றிலும் ரூபத்திலேயே அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்திரீயினுடைய எண்ணாகிய 13ம் எண் தீர்க்க தரிசனம் யாவற்றிலும் அமெரிக்காவுக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்திரீயின் தேசம், அவளுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன இத்தேசத்தில். அவள் இத்தேசத்தை பாழ்படுத்திப் போடுவாள். அவளே உலகம் முழுமையும் பாழ்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறாள்'' என்று நான் கூறினேன்.  225. (மேலும் ராய் அவர்களே, நான் அந்த மகா ஸ்திரீயை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்த உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. “ஒவ்வொரு கிரிமினல் குற்றமும் பற்றியும் அதன் பின்னணியைக் கண்டு பிடிக்க அலசி ஆராய்ந்தபோது, அமெரிக்காவில் நிகழும் ஒவ்வொரு கிரிமினல் குற்றத்திற்கும் பின்னால் அதற்கு காரணமாக ஒரு ஸ்திரீயானவள் இருக்கிறாள் என்பதை அரசே கண்டுபிடித்திருக்கிறது'' என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அது மிகவும் சரியாக இருக்கிறது. அது துன்மார்க்கமான ஸ்திரீகளினால் ஏற்படுகிறது).  226. ''அந்த சமயத்தில் ஸ்திரீகளுக்கு வாக்களிக்க உரிமையளிக் கப்படும். அதினால் அவர்கள் தவறான நபரை தேர்தலில் தேர்ந் தெடுப்பார்கள்'' என்று நான் கூறினேனே. அவர்கள் கடந்த தேர்தலில் அதையே செய்து விட்டார்கள். அந்த சமயத்தில் ஒரு மிகவும் சௌந்தர்யமாக அலங்கரித்துக் கொண்டுள்ள ஒரு மகா ஸ்திரீ அமெரிக்காவில் தோன்றுவாள்'' என்று கூறினேனே. அதற்கு நான் குறிப்பு ஒன்றைக் கொடுத்துள்ளேன்: (ஒருவேளை அது கத்தோலிக்க சபையாக இருக்கலாம்). 'அந்த ஸ்திரீயானவள் அமெரிக்காவில் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்வாள், நாட்டில் யாவரையும் அவளே அடக்கியாளுவள். அவள் பார்ப்பதற்கு சௌந்தர்யமுள்ளவளாக இருக்கிறாள். ஆயினும் கொடூரம் நிறைந்தவளாய் இருக்கிறாள்'' என்பதாக தரிசனத்தில் கண்டேன்.  227. 'அப்பொழுது நான் அமெரிக்காவை நோக்கிப் பார்த்தேன் அது எரிந்து சாம்பலாகி புகைக்காடாக மாறியது. அங்கே ஒன்றும் மிச்சமாக இருக்கவில்லை'' என்று நான் தரிசனங்கண்டு கூறினேன்.  228. நான் இவைகளை முன்னுரைத்துவிட்டு. “இது இப்பொழுது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பதாக இருக்கிறது'' என்று கூறினேன் அப்பொழுது.  229. அவ்வேழு தரிசனங்களின் முன்னுரைத்தலில், ஐந்து ஏற்கனவே நிகழ்ந்து விட்டது.  230. கத்தோலிக்க சபையானது அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும், அதுவே முடிவுகாலத்தின் வருகையாகும்.  231. நான் தரிசனங்கண்டு கூறினேன்: '' எங்கும் அடிமரங்கள் எரிந்து கொண்டிருந்தது போல் இருந்தது. பாறைகள் வெடித்துச் சிதறியது. முழு அமெரிக்காவும் வெறுமையாக காணப்பட்டது. நான் நின்ற இடத்திலிருந்து எங்கும் பார்த்தபோது, யாவும் வெறுமையாக காட்சியளித்தது'' என்று.  232. 'அத்தரிசனத்தின் சம்பவங்கள் யாவும் 33ம் ஆண்டு முதல் 77ம் ஆண்டு முடிய உள்ள காலத்தில் ஒரு சமயத்தில் நடைபெற வேண்டும்'' என்று கூறினேன். அது மிகக் தீவிரமாக வந்து நிறைவேறும்.  233. நாம் ஒரு வெடிமருந்து பீப்பாய் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறோம். சிநேகிதரே, யாவும் ஆயத்தமாக இருக்கின்றது.  234. ஓ, எங்கள் விலையேறப்பெற்ற பிரமபிதாவே, நீர் எங்களுக்கு வாக்களித்துள்ளீர். வாக்குத்தத்தம் செய்துள்ளீர். கிறிஸ்துவின் சேவகனாயிருப்பது அற்புதமானது அல்லவா? யாவும் எங்களுக்கு வாக்குரைத்திருக்கிறீர்! அவர் எங்கள் நடுவில் ஜீவிக்கிறார். இதை எண்ணிப் பார்க்கையில், நாங்கள் சிலாக்கியம் பெற்றதை அறிகிறோம். அவர் இப்பொழுதே எங்கள் நடுவில் எல்லா இருதயத்தின் இரகசியத்தையும் அறிந்தவராய், உங்களுடைய எல்லாவற்றையும் அறிந்தவராய் உலாவுகிறார். அக்கினிமயமான கண்கள் எங்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்க்கிறது. எங்களைப் பற்றி யாவையும் அறிந்திருக்கிறீர், நீர் எங்களை நேசிக்கிறீர்.  235. நீங்கள் அந்த சிறு மந்தைக் குழுவில் இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடையவில்லையா? அக்குழு தன் விசுவாசத்தை காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அது அவருடைய கட்டளையாயிருக் கிறது; ''பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்'' என்று. "கர்த்தர் அந்நாட்களை குறைத்திராவிடில், மாம்சமான ஒருவரும் இரட்சிக்கப்படவே முடியாது போய்விடும். நாம் சரியாக கடைசி காலத்தில் இருக்கிறோம்.  236. பெந்தெகொஸ்தேயின் ஸ்தாபனங்கள் குளிர்ந்து போய், வெதுவெதுப்பாக ஆகி, தேவனுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போடப்பட்டு இருக்கிறது.  237. ஒரு சிறு கூட்டம் வெளியே இழுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள், அவர்களில் தான், “இதோ மணவாளன் வருகிறார்'' என்பது ஏற்படுகிறது. அந்த சத்தம் உண்டாகும் போது, ஒவ்வொரு ஜாமத்திலும் நித்திரை செய்த கன்னியர் எழும்புகிறார்கள். ஆமென்! அவர்களில் இருந்தது அதே பரிசுத்த ஆவிதான். ஏழு ஜாமங்கள் உண்டு என்றும், நாம் இந்த கடைசி ஜாமத்தில் இருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.  238. சபையானது மணவாளனோடு உள்ளே போய்விட்ட பிறகு... சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவில் நாம், யோசேப்பு எவ்வாறு தன் சகோதரரான இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்திட விரும்பிய போது, தன் மணவாட்டியை வீட்டின் உள்ளே அனுப்பி விடுகிறான். அவன் அங்கே தன் சகோதரரான யூதர்களோடு தனித்து நிற்கிறார். ''நான் தான் உங்கள் சகோதரனாகிய யோசேப்பு'' என்று கூறுகிறார்.  239. அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தி அதில் அவருக்காக புலம்புவார்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக புலம்புவார்கள் என்று திட்டவட்டமாக வேதத்தில் உரைக்கப்பட்டுள்ளது.  240. “இந்த வடுக்கள் உமக்கு எங்கே கிடைத்தன?'' என்று கேட்பார்கள். ''உம்முடைய கையில் உள்ள இந்த வடுக்கள் யாது.'' என்று கேட்பார்கள்.  241. “என் சிநேகிதரின் வீட்டிலே உண்டானது'' என்பார்.  242. ''அவரைக் குத்தினவர்கள் யாவரும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்.'' இதோ அங்கே அவர் யோசேப்பைப்போல் தன் சகோதரருக்கு முன்னால் நிற்கிறார்.  243. யோசேப்பு கூறினான்: 'நீங்கள் ஒருவருக்கொருவர் கோபப்பட வேண்டாம். ஜீவனைக் காக்கும்படி தேவனே இதைச் செய்தார்'' என்றான். அதைப்போலவே இயேசுவும் கூறுவார். அது என்ன? புறஜாதி சபையின் ஜீவனைக் காக்கும்படியாகத்தான். ''புறஜாதிகளிலிருந்து அவருடைய நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்து கொள்வார்''  244. ஓ, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம், சகோதரரே. நாம் இங்கே அதில் தான் இருக்கிறோம். கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. இந்தப் பழைய நல்ல பாடலைப் பாடுவோம். பெந்தெ கொஸ்தே அனுபவம் பெற்ற சகோதர சகோதரிகளாக ஒன்று சேர்ந்து பாடுவோம். “நான் ஒரு பாப்டிஸ்டு'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றிருந்தால், நீங்களும் ஒரு பெந்தெகொஸ்தேயினர் தான். சரி, சரி. கிறிஸ்தவ அன்பில் நம் இதயங்களை பிணைக்கிற அந்த அன்பின்கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக உன்னதத்தில் இருப்பதைப்போல் பல்வேறு மக்களின் ஐக்கியம் அதில் உண்டு. 245. இப்பொழுது செவிகொடுங்கள், சகோதரரே! நம் மத்தியில், யாரிடமாவது தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிறிய கசப்புணர்ச்சி உங்கள் இருதயத்தில் வந்திருந்தால் (நான் சொல்வதைக் கேளுங்கள்) அதைக் களைந்து போடுங்கள். அதை வெளியேற்றுங்கள். (ஒரு சகோதரி அன்னிய பாஷையில் பேசுகிறார்). 52